தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு வந்தே பாரத்.. செப்.24 முதல்.. சென்னை டூ திருநெல்வேலி!

Sep 20, 2023,06:11 PM IST

சென்னை: சென்னை- திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்., 24ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.


இதோ வருகிறது அதோ வருகிறது என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஒரு வழியாக வந்து விட்டது. சென்னை எழும்பூரிலிருந்து இருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில் செல்லும். எழும்பூரிலிருந்து இயக்கப்படவுள்ள முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. 




சென்னை  டூ நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50க்கு புறப்பட்டு இரவு 10.40க்கு நெல்லை சென்றடையும்.  வழியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களில் நிற்கும். அதேபோல காலை 6மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.


3வது வந்தே பாரத் ரயில்: தமிழ்நாட்டில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – மைசூரு  மற்றும் சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 


இந்த நிலையில் தற்போது 3வது வந்தே பாரத் ரயிலை தமிழ்நாடு பெறுகிறது. தமிழ்நாட்டுக்கு மேலும் சில வந்தே பாரத் ரயில்களும் வரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. படிப்படியாக இவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்