சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டிலேயே மிகப் பழமையான மற்றும் பெரிய பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது. இதன் பெயர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகும். நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்கா என்ற விருதையும் இது பெற்றுள்ளது நினைவிருக்கலாம். வண்டலூரில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அரிய வகை பறவைகள் மற்றும் அழிந்து வரும் விலங்கினங்களும் உள்ளன.
இந்த பூங்காவில் குழந்தைகள் பார்க், இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், மீன்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைய பெற்றுள்ளன. இதனை கண்டு ரசிப்பதற்காக தினசரி 2000 முதல் 3000 வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகின்றனர்.
பூங்காவை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க பேட்டரி வாகன வசதிகளும் உள்ளன. இந்த பூங்காவை சுற்றி பார்க்க நபருக்கு ரூபாய் 200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாக இருக்கும் நிலையில், புத்தண்டுக்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 31 பூங்கா திறந்திருக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் அன்றைய தினம் பூங்கா செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டும் செவ்வாய்கிழமை டிசம்பர் 31ஆம் தேதி அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறகென்னப்பா.. புளியோதரையுடன் கிளம்பிப் போய் புலி சிங்கத்தைப் பார்த்து மகிழ்ந்துட்டு வாங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}