கோயம்புத்தூர்: பாஜக மகளிர் அணித் தேசியத் தலைவர் வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர். அகில இந்தியப் பதவியில் இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கும் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து கொண்டே இருப்பார் வானதி சீனிவாசன். இதுதவிர தனது தொகுதிப் பணிகளையும் பார்க்கிறார். இதனால் எப்போதும் பிசியாகவே இருப்பவர் வானதி சீனிவாசன்.
தற்போது ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் அவர் அடிக்கடி சென்று தேர்தல் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்
சமீபத்தில் சட்டிஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் நடந்த பாஜக பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாக்கு வேட்டையாடினார். அதை முடித்து விட்டு கோவை திரும்பிய அவர் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கோவை மருத்துவ மைய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு கோவை தெற்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது 2வது முறையாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}