சென்னை: ஒரு காதலன் காதலியிடமும், காதலி காதலரிடமும், அல்லது இருவரும் இணைந்து வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுவதற்கான வாக்குறுதி கொடுக்கும் அழகான தருணம் இன்று!
பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினம் ஒரு வார காலத்திற்கு ஒவ்வொரு தினமும் ஒரு விஷயத்திற்காக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி 11ஆம் தேதி பிராமிஸ் டேவாக ஒவ்வொரு வருடமும் காதலர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் ஒருவருக்கு ஒருவர், எந்த நேரத்திலும் துணை இருப்பேன் என்ற உறுதிமொழியை ஏற்கும் அழகான நாள் இன்று!
ஒரு காதலன் ப்ரொபோஸ் பண்ணா மட்டும் போதாது. கிப்ட் கொடுத்து இம்ப்ரஸ் பண்ணாலும் பத்தாது. தன்னுடைய துணைக்கு என்றும் துணை இருப்பான் என்ற உறுதியான நம்பிக்கை அன்பான காதலிக்கு வேண்டும். அந்த நம்பிக்கையான வாக்குறுதி இருந்தால், மட்டுமே எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய காதலன் இருப்பான் என்று காதலிக்கு எண்ணம் தோன்றும். அந்த எண்ணமே காதல் என்ற பந்தத்தில் நிலைத்து நீடிக்க வைக்கும். இந்த அழகான காதல் நிலைத்து நீடிக்க வைக்கும் தருணத்திற்கான தினம் இன்று!
ப்ரொபோஸ் பண்ணும் போது, கிப்ட் கொடுக்கும் போது, சாக்லேட் கொடுக்கும்போது, எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அன்பை பரிமாறி கொள்கிறோமோ.. அதுபோல காதலர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பிராமிஸ் செய்து கொள்ள வேண்டும். ஏன் தெரியுமா.. அப்பதான் இருவருக்கும் இடையிலான உண்மையான காதலில் அன்பு, அரவணைப்பு, நேசம், காதல், பாசம் நம்பிக்கை எல்லாம் வலுப்படும்.
அன்பானவர்கள் இருவரும் என்ன ப்ராமிஸ் பண்ணனும்.. எப்படி பிராமிஸ் செய்தால் இருவரும் ஒற்றுமையாக இருப்பாங்க.. என்று தானே கேக்குறீங்க வாங்க சொல்கிறேன்.
அன்பான காதலியிடம் மகிழ்ச்சியான சமயத்தில் மட்டுமல்லாமல் எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் வாழ்நாள் முழுவதும் நான் உன்னோடு இருப்பேன் என்று ப்ராமிஸ் செய்யுங்க. அன்பானவர் இருவரும் வாழும் காலம் வரை உறவுகள் தொடர விட்டுக் கொடுத்து வாழ்வோம் என்று பிராமிஸ் செய்யுங்க.
நாம் எப்படி வாழ்வோம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பதை பற்றி யாராலும் சொல்ல முடியாது. ஆனால் வாழும் காலம் வரை நான் உன்னோடுதான் வாழ்வேன் என்ற உறுதி கொள்ள வேண்டும். அப்படி வாழும் போது உன் அன்பையும், அரவணைப்பையும் பெற நான் முயற்சிப்பேன். காலம் முழுவதும் உன்னோடு மட்டுமே நான் வாழ்வேன் என்று பிராமிஸ் செய்யுங்க.
காதலிக்கும் போது அல்லது வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது எந்த இடையூறுகள் வந்தாலும் அதனை தகர்த்தெறிந்து நம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே அஸ்திவாரமாக வைத்து உனக்கு நான் எனக்கு நீ என்று வாழ பிராமிஸ் செய்யுங்க.
காதலர்கள் இருவரும் எப்போதும் அன்பான நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வோம் என்று பிராமிஸ் செய்யுங்க. நீங்க நம்பிக்கை இழக்கும்படி ஏதேனும் செய்தால்,அன்பானவர்கள் இருவரும் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசி பகிர்ந்து புரிதலை உருவாக்குவோம் என்று பிராமிஸ் செய்யுங்க.
அன்பானவர்கள் இருவருக்குள்ளும் சகிப்புத்தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், இருக்க வேண்டும். அவை இருந்தால் தான் எந்த சூழ்நிலையிலும் கருத்து வேறுபாடால் இருவரும் பிரியாமல் ஒற்றுமையாக வாழ முடியும் .அப்படி ஒற்றுமையாக இருப்போம் என்று இருவரும் பிராமிஸ் செய்யுங்க.
உன் உறவுகள் எல்லாம் எனக்கும் உறவுகள் என்பதை இருவரும் இணைந்து பேசி பிராமிஸ் செய்யுங்க. கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை எதிர்காலத்தில் பேசி காயப்படுத்த மாட்டோம் என்று உறுதி கொள்ளுங்க.
நான் எப்பொழுதும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்.. ஐ லவ் யூ என்று மூன்றெழுத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருங்கள். அப்போது அன்பானவர்கள் தனக்காக அன்பையும், அரவணைப்பையும் கொடுக்கிற ஒருவர் இருக்கிறார் என்று நினைத்து உங்கள் மீது பாசத்தையும் அன்பையும் அதிகப்படுத்துவார்கள். காதலியிடம் தினமும் ஐ லவ் யூ என்று சொல்வேன் என்பதையும் சேர்த்து பிராமிஸ் செய்யுங்க.
அப்பாடா ஒரு வழியா எப்படி ப்ராமிஸ் பண்ணனும் என்பதை நான் சொல்லிட்டேன். இதெல்லாம் சொல்றதுக்குள்ள எனக்கே மூச்சு வாங்குது. நீங்க மனப்பாடம் பண்ணி எப்படி சொல்ல போறீங்க. ஒரு வழியா சொல்லிடுங்க. அப்பதான் உங்க லவ் சக்ஸஸ் ஆகும், ஸ்ட்ராங்கா இருக்கும். உங்க மேல நம்பிக்கை வரும். போங்க சீக்கிரம் போய் பிராமிஸ் டேவை ஜமாய்ங்க.
வாழ்த்துக்கள் காதலர்ஸ்!
{{comments.comment}}