சென்னை: மென்மையை தேடி பயணிக்கும் பெண்களின் மனதிற்கு பிடித்தவாறு டெடி பொம்மைகளை பரிசாக வழங்கி அன்பை வெளிப்படுத்தும் கரடி பொம்மைகள் தினம் இன்று.
காதலர் தின கொண்டாட்டத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதியான இன்று டெடி டே கொண்டாடப்படுகிறது. இது காதல் வாரக் கொண்டாட்டத்தில் நான்காவது நாளாகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று டெடி தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில், காதலன் மட்டுமல்லாமல் அக்கா தம்பி, அண்ணன் தங்கை, கணவன் மனைவி என தனக்கு பிடித்தமான அன்பானவர்களுக்கு டெடி பியர்களை பரிசாக வழங்குகிறார்கள்.
குறிப்பாக காதலன் காதலிக்கு கொடுக்கக்கூடிய அன்பு, அரவணைப்பு, ஆறுதல், என்பதை குறிக்கும் விதமாக டெடி பொம்மைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில் வசீகரிக்கும் அழகுடன் கூடிய டெடி பொம்மைகளின் பொசு பொசுப்பு தன்மை, மென்மையான மேனி, அதன் அரைவணைப்பு போன்ற காரணங்களால் காதலர்கள் காதலிக்கு பிடித்தமான டெடி பொம்மைகளை பரிசாக வழங்கி அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
டெடி பொம்மைகளை பிடிக்காத பெண்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் டெடிபியர்களை கட்டிப்பிடித்து தூங்குவது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் தாயைப் போன்ற மெதுவான அரவணைப்பு டெடி பொம்மைகளிடம் கிடைக்கிறது. இதனால் தங்களின் அன்பானவர்கள் அருகில் இல்லை என்றால் கூட அந்த ஏக்கத்தை போக்கும் விதமாக டெடி பொம்மைகளின் தோற்றமும் அழகும் துணையாக இருக்கும். இது அன்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.இதனால் காதலனுக்கு நிகரான அரவணைப்பை பெண்கள் டெடி பொம்மைகளிடம் உணர்கின்றனர்.
அப்புறம் என்ன காதலர்களே.. உற்ற தோழனாக, சகோதரனாக, கணவனாக காதலனாக, அம்மாவாக, நினைக்கும் டெடி பொம்மைகளை காதலிகளுக்கு கிஃப்டாக கொடுத்து அவர்களை இம்பிரஸ் செய்யுங்க..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திடீர் பயணமாக இன்று மாலை.. சென்னை வருகிறார்.. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இந்தப் படம் ஏன் கூடாது என்பதுதான்.. காதல் என்பது பொதுவுடமை எடுக்க முதல் காரணம்.. ரோகிணி பளிச்!
எகிறி வரும் தங்கம் விலை... ஒரு கிராம் ரூ.8,000த்தை கடந்தது.., இப்படியே போனா எப்படி!
பிரஷாந்த் கிஷோருடன் இன்றும் விஜய் சந்திப்பு.. தைப்பூசத்தையொட்டி மக்களுக்கும் வாழ்த்து!
Promise Day 2025.. காதலியின் கரம் பற்றி.. நம்பிக்கையூட்டுங்கள்.. இறுதி வரை இணைந்திருப்போம் என்று!
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்.. தைப்பூசம்.. வாங்க வேண்டிய முக்கிய பொருட்கள் மற்றும் சடங்குகள்
அமைச்சரவை கூட்டத்தில்.. எளிய மக்களின்.. 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு.. முதல்வர் பெருமிதம்!
திக்கெட்டும் ஒலித்த அரோகரா கோஷம்.. முருகனின் அறுபடை வீடுகளிலும்.. களை கட்டிய தைப்பூச திருநாள்!
மூன்றே நாட்களில் இந்திய அணியை மூட்டை கட்டி விடுவோம்.. கொக்கரிக்கும் அர்ஜூன ரனதுங்கா
{{comments.comment}}