"உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச சாக்லேட் எது.. அவர் கொடுத்தாரா?".. இன்னிக்கு என்ன நாள்!

Feb 09, 2024,10:34 AM IST

சென்னை: அது என்னவோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. காதலர்களின் பர்ஸ்ட் சாய்ஸ்.. சாக்லேட்தான்.  காதலர்களுக்கும் சாக்லேட்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன தெரியுமா காதலர்களுக்கு இடையே உள்ள ஆழமான இனிமையான அன்பை வெளிப்படுத்துவது சாக்லேட்தான்.. சாக்லேட் வாங்கிக் கொடுத்து விட்டால் போதும்.. முகமெல்லாம் அப்படி ஜொலிக்கும்!


இதன் அடையாளமாக  கொண்டாடும் தினம்தான் இந்த சாக்லேட் தினம்..  காதலர் வாரத்தில் இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. நேத்து காதலைச் சொல்லியாச்சு.. இன்று சாக்லேட் கொடுத்து மனசை இனிமையாக்க வேண்டும் அல்லவா.. அதுக்குத்தான்.


பெரியவர்கள் எந்த ஒரு நல்ல செயலை செய்தாலும் அதற்கு முதலாக இனிப்பு கொடுத்து ஆரம்பிப்பது வழக்கம். அதுபோல காதலர்கள் இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் போது இனிப்பு கொடுத்து பரிமாறிக் கொள்ளும் இனிமையான தினம் இன்று!




காதலர் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடி வருகிறோம். பிப்ரவரி முதல் வாரம் ஏழாம் தேதி ரோஸ் டேவில் தொடங்கி, 8ஆம் தேதி புரபோசல் டே, 9ஆம் தேதி சாக்லேட் டே, 10ஆம்  தேதி டெடி டே, 11 ஆம் தேதி பிராமிஸ் டே, 12ஆம் தேதி ஹக் டே, 13ஆம் தேதி கிஸ் டே, கடைசியாக 14ஆம் தேதி காதலர் தினம் வரை உங்களின் அன்பானவர்களுடன் கொண்டாடுவார்கள். அந்த வகையில்  அன்பானவர்களுக்கான இனிப்பான தினம் இன்று!


ஒவ்வொரு வருடமும் ஜூலை 9ஆம் தேதி சர்வதேச சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தின கொண்டாட்டத்தில் மூன்றாவது நாள்தான் இந்த சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாக்லேட் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இதன் சுவைக்கு எல்லோரும் அடிமை.  சாக்லேட் சுவைக்கும் போது நம் நாவில் எச்சில் ஊறுவதுடன் இனிமையான உணர்வுகள் ஏற்படும்.. நேற்று  பலருக்கும், கை, கால்கள் நடுங்கி..  இதயம் படபடவென அடித்து.. பயம் கழுத்தை நெறித்து.. ஒரு வழியா ஃபுரொபோஸ் செய்து முடித்திருப்பார்கள்.. அதில் சக்ஸஸ் கண்டவர்கள்.. இன்னிக்கு இந்த இனிமையான நாளை ஜாம் ஜாம் என்று கொண்டாடலாம்.




இன்னைக்கு உங்க அன்பானவர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுங்க.. அவங்க மனசை இனிமையாக்குங்க.. உங்க பக்கம் இறுக்கிப் பிடிங்க.. முன்னோர்கள் எந்த செயலை தொடங்கினாலும் அதற்கு முன்பு இனிமையாக தொடங்க வேண்டும் என்று இனிப்புகள் வழங்குவார்கள். நம் முன்னோர்கள் மட்டும் சொல்லவில்லை அறிவியல் ரீதியாக சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமன் மற்றும் காபின் ஆகியவை நம் மூளையில் உள்ள என்டோர்பின்களை வெளியிடும். இதனால் நம் மனமும் உடலும் அமைதி கொள்ளும்.  காதலர்கள்

இருவரும் முதல் முதலாக தங்கள் அன்பை வெளிப்படுத்தும் போது இனிப்பு சாப்பிட்டு ஆரம்பிக்க வேண்டும். அது நம் உடலுக்கும் மனதுக்கும்  அமைதியை கொடுக்குமாம்.. சாந்தமாக்குமாம்.. அந்த நேரத்தில் ஒரு காதலன் தன் காதலியிடம் உணர்வுகள்  இனிமையாக வெளிப்படுத்த அழகான தருணமாக அமையுமாம்.


இப்ப புரிஞ்சுச்சா.. சரி எனக்கு டைரி மில்க் பிடிக்கும்.. எனக்கு சாக்லேட் கைக்கு வந்தாச்சு.. உங்க துணைக்கு என்ன சாக்லேட் பிடிக்கும் என்று தெரியுமா.. உடனே உங்க துணைக்கு பிடிச்ச சாக்லேட் எது.. அது எந்த பிளேவர்.. என்பதை தெரிந்து ஸ்வீட் எடுங்க.. அவங்க கைல கொடுங்க.. கொண்டாடுங்க.!


ஹாப்பி சாக்லேட் டே.. பிளடி ஸ்வீட் காதலர்ஸ்..!

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்