கவிஞர் வைரமுத்துவின்.. "மகா கவிதை".. மலேசிய அரசின்.. பெருந்தமிழ் விருதை வென்றது..!

Feb 27, 2024,10:48 AM IST

சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய "மகா கவிதை" என்ற நூல்  மலேசியாவின் "பெருந் தமிழ் விருதை" பெறத் தேர்வாகியுள்ளது. இந்த விருதினை மலேசியா நாட்டின் தமிழ் இலக்கிய காப்பகமும், தமிழ் பேராயமும், இணைந்து வரும் மார்ச் 8ஆம் தேதி வழங்கவுள்ளன.


மகா கவிதை என்ற புத்தகம் கவிஞர் வைரமுத்துவின் 39 வது படைப்பாகும். முப்பது மாத நீண்ட ஆய்வுக்கு பிறகு வெளிவந்த வைரமுத்துவின் கவிதை நூல் இது. நிலம் -நீர் -தீ -வளி-வெளி என்ற ஐம்பூதங்களின் சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட சிறந்த படைப்பாக அறியப்படுகிறது. இந்த நூலை கடந்த ஜனவரி 1ஆம் ஆண்டு முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். இந்த  விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். இந்த நூல் வெளிவந்து உலகம் எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.




இந்த நிலையில் சிறந்த தமிழ் நூலுக்கான மகாகவிதை நூல் மலேசியா பல்கலைக்கழகத்தின் பெருந்தமிழ் விருதை பெறுகிறது என்பதை மலேசிய இந்திய காங்கிரஸின் தேசிய துணை தலைவரும் ,முன்னாள் அமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ  எம். சரவணன் சென்னையில் அறிவித்தார்.




மலேசியா பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் இணைந்த மதியுரைஞர்  குழு "பெருந் தமிழ் விருதுக்கு" கவிஞர் வைரமுத்து எழுதிய மகாகவிதையை தேர்ந்தெடுத்து பாராட்டியுள்ளது. இந்தக் குழுவில் மாஹ்சா பல்கலைகழக வேந்தர் டான்ஸ்ரீ முஹம்மது ஹனிபா, மலாய்ப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரைஞர் முனைவர் கோவி.சிவபாலன், டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா, பாவலர் முனைவர் முரசு நெடுமாறன், தமிழ்ப்பெருந்தகை கம்பார் கனிமொழி குப்புசாமி, இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், மலாய்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை, மேனாள் காவல்துறை ஆணையாளர் டத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன், மலேசியப் புத்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் டத்தோ பரமசிவம் முத்துசாமி, மலேசியப் புத்ரா பல்கலைக்கழக முதுநிலை விரிவுரைஞர் முனைவர் வீரமோகன் வீரபுத்திரன் ஆகியோர் பங்கேற்று மகாகவிதையை  விருதுக்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.


இந்த நூலுக்கான விருதளிப்பு விழா வரும் மார்ச் 8ஆம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் புகழ்பெற்ற உலக வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்திய காங்கிரஸின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்விழாவிற்கு தலைமை தாங்குகிறார். டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னிலை வைக்கிறார்.




இந்த விருது குறித்து, கவிஞர் வைரமுத்து கூறுகையில்,  மகா கவிதையைப் பெருந்தமிழ் விருதுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் மதியுரைஞர் குழுவுக்கு என் வணக்கம். விருதளிப்பு விழாவை முன்னெடுத்திருக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவருக்கும் என் நன்றி.  இந்த விருதை நான் பெரிதும் மதிக்கிறேன். பெருந்தமிழ் விருது தமிழ் உலகுக்கு ஒரு மகுடம். ஆனால், இது என் ஒரு தலைக்கு மட்டுமல்ல. ஒரு தமிழ்த் தலைமுறையின் ஒவ்வொரு தலைக்கும் சூட்டப்படுவது என்றே கருதுகிறேன். மலேசியத் தமிழர்களுக்கும் மலேசியத் திருநாட்டுக்கும் மலேசிய மக்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்