- பொன் லட்சுமி
வைகாசி விசாகம் .. முருகப்பெருமானுக்குரிய சிறந்த நாளாகும். முருகனுக்கு உரிய வைகாசி விசாகம் திருநாள் இன்று வைகாசி 4 (மே 22) காலை 8:18 மணிக்கு தொடங்கியது.. இந்த நல்ல நாளில் பௌர்ணமியும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு. அது மட்டும் அல்லாமல் பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்ததும் இந்த நல்ல நாளில்தான்.. மகாபாரதத்தில் வில் வித்தகனாக விளங்கிய அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்றதும் இந்த நாளில்தான். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த விரதம் எவ்வாறு இருப்பது, அந்த விரதம் இருப்பதினால் கிடைக்கும் பலன்களைக் குறித்து பார்ப்போம்..
விசாகத்திற்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது .அதாவது பாரசமுனி என்று ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தார்கள்.. ஒரு நாள் ஆறு குழந்தைகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பாரச முனி நேரமாகிவிட்டது, தண்ணீரை விட்டு வெளியே வாருங்கள் என்று குழந்தைகளிடம் கூறினார்... ஆனால் அவர் குழந்தைகள் அதை கேட்காமல் நீரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. அதனால் கடும் கோபமடைந்த பாரசமுணி நீங்கள் ஆறு பேரும் மீனாக போக கடவீர்கள் என்று சாபமிட்டார்.. அதனால் பதறிய குழந்தைகள் நாங்கள் தெரியாமல் செய்து விட்டோம் எங்களை மன்னித்து இதற்கு சாப விமோசனம் தாருங்கள் என்று பாரச முனியிடம் வேண்டினார்கள்.. அதற்கு அவர் அன்னை பார்வதி தேவியின் அமுத பாலை முருகப்பெருமான் அருந்தும் போது அவர் திருவாயில் இருந்து என்றைக்கு ஒரு துளி பால் உங்களுக்கு கிடைக்கிறதோ அன்று தான் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார்.
ஒரு நாள் கயிலையில் பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு அமுத பால் ஊட்டும் போது அவர் வாயில் இருந்து ஒரு சொட்டு பால் அந்த நதியில் விழுந்தது. அதை மீனாக இருக்கும் அந்த குழந்தைகள் பருகியதும் முனிவர்களாக மாறினார்கள்.. இதை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் முருகன் கோயில் மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை விடுகிறார்கள்.. முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலை குடித்து சாப விமோசனம் பெற்ற பாரச முனிவரின் குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மைகளை வைத்து ஒவ்வொரு ஆண்டும் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான விசாக நட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது என்பது மிகவும் விசேஷமானது... 27 நட்சத்திரங்களில் மிகவும் விசேஷமானது இந்த விசாக நட்சத்திரம் தான். ஏனென்றால் ஆறு நட்சத்திரங்களை அடக்கிய இந்த நட்சத்திரத்தில் தான் முருகப்பெருமான் அவதரித்தார்... இந்த நட்சத்திரத்தில் அவதரித்ததனால் முருகப்பெருமானுக்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் விசாகன் அதில் வி என்றால் பறவை ( மயில்)என்று பொருள் சாகன் என்றால் பயணிப்பவர் .. அதாவது பறவை மீது பயணிப்பவர் என்று அர்த்தம்.. அதேபோல விசாகம் என்னும் சொல்லுக்கு குளிர்ந்த வசந்த காலம் என்று பொருளாகும்.. ஒவ்வொரு முருகன் கோவிலிலும் இந்த விசாகத்தை வைகாசி உற்சவம் என்று கூறுவார்கள்.. கோடை காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலத்தில் ஏற்படும் வசந்தத்தை தான் விசாக காலம் என்று கூறுவார்கள்.. அப்படி ஒரு வசந்தத்தை தங்களுடைய வாழ்க்கையில் கொண்டு வருவதற்காக இருக்கும் விரதம் தான் இந்த வைகாசி விசாக விரதம் ஆகும்.
முருகப்பெருமானை வழிபடும்போது தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும் பாவங்களையும் போக்குவதற்கு வேண்டியும் , பல வருடங்களாக குழந்தை வரம், திருமண வரம் வேறு என்ன பிராத்தனைகள் ஆனாலும் இந்த விசாகத் திருநாளில் விரதம் இருந்து வழிபட்டால் கண்டிப்பாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.. நாமும் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்கள் துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறோம். அதிலிருந்து மீள்வதற்காக நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு வசந்தம் வீச வேண்டும் ஒரு மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்று இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.. பட்ட மரமே ஆனாலும் வசந்த காலத்தில் எப்படி அது துளிர்க்குமோ அதே போல நம்முடைய வாழ்க்கையிலும் கண்டிப்பாக இந்த விரதம் இருப்பதனால் வசந்தம் வீசும்.. சரி இந்த விரதத்தை எப்படி கடைப்பிடிக்கலாம் என்று பார்ப்போம்.
அதிகாலை எழுந்து நீராடி வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு அழகாக பூ அலங்காரம் செய்து அவரவர்கள் வசதிக்கு ஏற்ப முருகனுக்கு உகந்த பஞ்சாமிர்தமோ அல்லது தேன் கலந்த பாலோ, சர்க்கரைப் பொங்கலோ அல்லது தேனும் திணைமாவும் கலந்த மாவு உருண்டைகளோ ஏதோ ஒன்று வைத்து வழிபடலாம்... எதுவுமே முடியவில்லை என்றால் இரண்டு வாழைப்பழங்களும் வெற்றிலை பாக்கும் வைத்து உள்ளன்போடு மனதார முருகனை வேண்டி கொள்ளலாம்..
கந்த சஷ்டி கவசம் ,திருப்புகழ், கந்தபுராணம் , கந்த குரு கவசம் இதில் தங்களுக்கு எது பிடித்ததோ அதை மனதார பாராயணம் செய்யலாம்... விரதம் இருக்கலாம் என்று நினைப்பவர்கள் காலையில் இருந்து உபவாசம் இருந்து முருகனை வழிபடலாம்... முடியாதவர்கள் தங்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலில் சென்று முருகனுக்கு நடக்கும் பால் அபிஷேகத்திற்கு தங்களால் முடிந்தால் பால் வாங்கி கொடுத்து அபிஷேகத்தை கண் குளிர பார்த்து வழிபடலாம்.. காலையில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் மாலையில் சென்று வழிபடலாம்.
கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கு ஏற்றி முருகனின் பாடல்களை பராயணம் செய்து வழிபடலாம்.. காலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுபவர்கள் காலையில் 9:00 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையில் உள்ள நேரத்தில் விரதம் இருந்து வழிபடலாம்.. அதேபோல இன்று மாலையில் பௌர்ணமியும் சேர்ந்து வருவதனால் மாலையில் விளக்கு ஏற்றி வழிபடுபவர்கள் மாலை 7:20 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை வழிபடலாம்.
குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து வழிபடுபவர்கள் முருகனுக்கு மிகவும் பிடித்தமான கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து வந்தால் கண்டிப்பாக விரைவில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் .. அதேபோல குடும்பத்தில் ஒற்றுமை நிலவுவதற்கும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையின் இலகுவதற்கும் இந்த வைகாசி விசாகத்தை விரதம் இருந்தால் கண்டிப்பாக நிறைவேறும்..
இந்த நல்ல நாளில் விரதம் இருக்கும் அனைவருக்கும், விரதம் இருக்க முடியாதவர்களுக்கும் அந்த முருகனின் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று மனதார வேண்டிக் கொள்வோம்..
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}