வைகை எக்ஸ்பிரஸ் "ஸ்லோ"வாகிறது... "அனந்தபுரி" சூப்பர் பாஸ்ட் ஆகிறது....!!

Sep 29, 2023,02:05 PM IST

மதுரை: அக்டோபர் 1ம் தேதி  முதல் வந்தே பாரத்  ரயிலுக்கு வழி விடுவதற்காக, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்படுகிறது. இதுதவிர அனந்தபுரி எக்ஸ்பிரஸ்  ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படுகிறது.


தமிழ்நாட்டின் மிக மிக முக்கியமான, பழமையான ரயில் சேவையில் ஒன்றுதான் சென்னை மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸ் ரயில். இது மட்டுமே ஆரம்ப காலத்தில் பகல் நேரத்தில் சென்னைக்கு இயக்கப்படும் ரயிலாக இருந்து வந்தது.




தென் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக மதுரை பக்க மக்களின் வாழ்க்கையோடும், உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரயில். பல அரசியல் தலைவர்கள் இந்த ரயிலில் பயணித்துள்ளனர். அந்த வகையில் வரலாற்றிலும் இடம் பெற்ற ரயில்தான் வைகை எக்ஸ்பிரஸ். கடந்த 46 வருடங்களாக மதுரையிலிருந்து தினமும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சாமானிய மக்கள் பயணிக்க ஏதுவாக இருந்து வருகிறது. குறைந்த கட்டணத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு பயணிக்க இது உதவியாக உள்ளது.


இந்த நிலையில் தற்போது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒரு சோதனை வந்துள்ள்ளது. அது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உருவில் வந்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி முதல் நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் தினமும் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக பயணிகள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.


வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 .25 மணிக்கு  சென்னையை சென்றடையும். மறு மார்க்கமாக சென்னையில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9. 15 மணிக்கு வந்தடையும். தற்போது இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். வந்தே பாரத் ரயில் செல்லும் போது அதன் வழித்தடத்தில் எந்த ரயிலும் செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதனால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், வந்தே பாரத் ரயில் வரும்போது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இதனால் பயணிகளுக்கு தேவையில்லாத அசவுகரியம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


இந்த நிலையில்தான் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அக்டோபர் 1 முதல் மதுரையிலிருந்து காலை 6:40 மணிக்கு ரயில் புறப்பட்டு மதியம் 2 .10 மணிக்கு சென்னையை சென்றடையும். சென்னையில் இருந்து வழக்கம் போல பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு, ஆனால் இரவு 9:30 மணிக்கு மதுரைக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதிதாக வந்த ரயிலுக்காக, பாரம்பரியமான ஒரு ரயிலின் பயண நேரத்தை தாமதாக்குவது நியாயமா என்று பயணிகள் கேட்கிறார்கள்.


சூப்பர் பாஸ்ட் ஆகும் அனந்தபுரி




இதற்கிடையே, தெற்கு ரயில்வே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த ரயில், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றப்படுகிறது.


அக்டோபர் 1 முதல் ரயில் எண் 16823/16824 சென்னை எழும்பூர் - கொல்லம் மற்றும் கொல்லம் - சென்னை எழும்பூர் இடையிலான அனந்தபுரி ரயில், அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் (புதிய ரயில் எண் 20635/20636) ஆக மாற்றப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்