மீண்டும் அரசியல் பேசிய வடிவேலு.. திமுகவின் திட்டம் என்ன.. விஜயகாந்த் போல.. விஜய்க்கு டார்கெட்டா?

Feb 28, 2025,07:51 PM IST

சென்னை: மீண்டும் திமுக மேடையேறியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு. மீண்டும் அரசியல் பேசியுள்ளார். கடந்த முறை அவர் அரசியல் பேசியபோது அது திமுகவுக்கு பாதகமாக அமைந்தது. இந்த முறை அவரை வைத்து திமுக ஏதாவது திட்டம் போட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தத் தேர்தலில் அதிமுகவும் - தேமுதிகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தக் கூட்டணி அமையாமல் தடுத்து தேமுதிகவை தன் பக்கம் இழுக்க திமுக தீவிரமாக முயன்றது. ஆனாலும் தேமுதிகவை தன் பக்கம் இழுத்து கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. தேமுதிக அமைத்த முதல் அரசியல் கூட்டணி இதுதான்.


அந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் வடிவேலுவை மேடையேற்றியது திமுக. திமுக மேடையில் வடிவேலு பேசிய பேச்சுக்கள் யார் மறந்தாலும் தேமுதிகவினர் மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகக் கடுமையாக விஜயகாந்த்தை விமர்சித்துப் பேசியிருந்தார் வடிவேலு. மிக மிக காட்டமான விமர்சனங்களை, கேலி கிண்டலை வைத்துப் பேசியிருந்தார் வடிவேலு.




அவரது பேச்சு மிகப் பிரபலமானது, பலரும் அதைக் கேட்டனர். ஆனால் ரியாக்ஷன்தான் வேறு மாதிரியாக போய் விட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். வடிவேலு சினிமாவை விட்டு பீல்ட் அவுட் ஆனார். நீண்ட காலம் அவரால் திரும்பி நடிக்கவே முடியவில்லை. பழைய வடிவேலுவும் அத்தோடு காணாமல் போனார். அன்று போன அந்த நகைச்சுவைப் புயல் வடிவேலுவை இன்று வரை ரசிகர்களால் பார்க்கவே முடியவில்லை. அவரது திரையுலக வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போனது. அதன் பிறகு அவர் பெரிய அளவில் நடிக்கவில்லை. நடித்தாலும் படங்கள் ஓடவில்லை.


இந்த நிலையில் மீண்டும் திமுக மேடையில் ஏறியுள்ளார் வடிவேலு. முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளையொட்டி சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வடிவேலு பேசினார்.  அப்போது மீண்டும் திமுகதான் வெல்லும். முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் பதவியேற்பார். 200 தொகுதிகளுக்கும் மேல் ஜெயிப்பார் ஸ்டாலின். எதிர்ப்புகளையெல்லாம் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் மட்டும் இல்லாவிட்டால் தமிழுக்கு இன்னும் கேடு வந்திருக்கும். இவர் மட்டும் இல்லாவிட்டால் என்னாகும்.


மிகவும் திறமையான முதல்வர் மு.க.ஸ்டாலின். மிகவுநம் பொறுமையான முதல்வரும் கூட. அதே நேரத்தில் பொறுமைக்கும் அளவுக்கு இருக்கு. ஆனால் பொறுமையாக இருந்தாலும் கூட மக்களுக்கு என்ன செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்கிறார். அதுதான் அவரிடம் பிடித்தது.


என்னிடம் அமைச்சர் அரசியல்லாம் பேசாதண்ணே.. தலைவரை மட்டும் வாழ்த்துன்னு சொன்னார்.. தலைவரை வாழ்த்த முடியுமா.. அவர் மட்டுமல்ல, அவரது மகன், அவரது பேரன் எல்லோரும் வருவாங்க என்று பேசினார் வடிவேலு. வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திமுக மேடையில் அரசியல் பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த 2011 தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது போல இந்த முறை பெரிதாக அரசியல் பேசவில்லை. மாறாக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். அதேபோல இந்தித் திணிப்பு குறித்தும் தனது பாணியில் எளிமையாக விளக்கி நறுக்கென்று கொட்டும் வைக்கத் தவறவில்லை வடிவேலு. 


அதேசமயம், வருகிற சட்டசபைத் தேர்தலில் விஜய்க்கு இவரை களம் இறக்க ஆழம் பார்க்கிறதா திமுக என்று சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்து விட்டனர் பலர். வடிவேலு எப்படி விஜயகாந்ததுடன் மிக நெருக்கமாக பழகி நிறைய படங்களில் நடித்தாரோ அதேபோலத்தான் விஜய்யுடனும் மிக நெருக்கமான நட்பில் இருப்பவர். இருவரும் இணைந்த படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட்டும் அடித்துள்ளன. இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு எதிராக திரும்பியது போல விஜய்க்கு எதிராகவும் வடிவேலு திரும்புவாரா என்று தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடபழனியிலிருந்து.. வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சீமான் பயணம்.. காத்திருக்கும் 53 கேள்விகள்!

news

பாலியல் கொடுமைக்குள்ளான.. 3 வயது குழந்தை மீது புகார் கூறுவதா.. கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்!

news

உயிர் மற்றும் உரிமை பிரச்சினை.. மக்களிடம் கொண்டு சேருங்கள்.. முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ

news

வானிலை ஆய்வு மையத்தின்.. முதல் பெண் தலைவராக நாளை பொறுப்பேற்கிறார்.. அமுதா!

news

முதல்வர் வேட்பாளர் விஜய்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. பிகே வருகைக்குப் பிறகு மாறிய தவெக மனசு!

news

சென்னையில்.. மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தாருக்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம்

news

சம்மன்களை ஒட்டி விட்டுப் போக தனியாக நோட்டீஸ் போர்டு.. சீமான் வீட்டில் புதிய ஏற்பாடு!

news

தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

மீண்டும் அரசியல் பேசிய வடிவேலு.. திமுகவின் திட்டம் என்ன.. விஜயகாந்த் போல.. விஜய்க்கு டார்கெட்டா?

அதிகம் பார்க்கும் செய்திகள்