37 வயசு பெண்.. மாலை 4. 30 மணி இருக்கும்.. கதவைத் தட்டிய ஹோட்டல் ஊழியர்.. அதிர்ச்சியான போலீஸ்!

Mar 14, 2024,06:10 PM IST

பெங்களூரு:  உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த 37 வயதுப் பெண் பெங்களூர் ஹோட்டலில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.


உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா. 37 வயதான இவர் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்திருந்தார். பெங்களூர் வந்திருந்த இவர் சேஷாத்ரிபுரத்தில் உள்ள ஜெகதீஷ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் இவர் அறையை விட்டு வராமல் இருந்துள்ளார். இதனால் மாலை 4. 30 மணியளவில் ஒரு ஹோட்டல் ஊழியர் போய் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே கதவு பூட்டியிருந்தது தெரிய வந்தது.




இதையடுத்து போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது.  போலீஸார் விரைந்து வந்து மாற்றுக் கீ போட்டுத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜரீனா பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சூழலைப் பார்க்கும்போது இது கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்  மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பவுரிங் மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவில்தான் மரணம் எப்படி சம்பவித்தது என்று தெரிய வரும்.

சமீபத்திய செய்திகள்

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்