உ.பியை உலுக்கிய Stampede.. 122 உயிரைப் பலி கொண்ட சத்சங்கம்.. யார் இந்த போலே பாபா?

Jul 03, 2024,05:42 PM IST

லக்னோ:  உத்தரப் பிரதேசத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியுள்ளது அந்த மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்த சம்பவம். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யார் இந்த போலே பாபா என்ற கேள்வி இந்தியாவின் இதர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.


போலே பாபா என்பது அவருக்கு அவரது ஆதரவாளர்கள் வைத்த செல்லப் பெயர். அவரது உண்மையான பெயர் சூரஜ் பால் சிங். நாராயண் சாகர் விஸ்வ ஹரி அல்லது போலே பாபா என்று இவர் அறியப்படுகிறார்.. இவர் சாதாரண கான்ஸ்டபிளாக இருந்தவர். பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பினார். பல்வேறு சாமியார்களைப் பார்த்துப் பார்த்து, அவர்களது பேச்சைக் கேட்டுக் கேட்டும் ஆன்மீக சொற்பொழிவின் பக்கம் திரும்பினார். இவரது பேச்சை பலரும் விரும்பிக் கேட்கவே முழு நேர ஆன்மீக சொற்பொழிவாளராக மாறி விட்டார். இவர் நடத்திய  சத்சங்கம் எனப்படும் ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க வந்த இடத்தில்தான் நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்.




தலித் ஆன்மீகவாதி: 58 வயதாகும் இவர் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். கஸ்கஞ்ச் மாவட்டம் பஹதூர் நகரைச் சேர்ந்தவர். ஹத்ராஸிலிருந்து கிட்டத்தட்ட 65 கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமம் உள்ளது. சாதாரண எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்தான் போலே பாபா.  காவல்துறையில் கிட்டத்தட்ட 10 வருட காலம் கான்ஸ்டபிளாக பணியாற்றிய அவருக்கு சாமியார்கள் அவர்கள் தரும் பிரசங்கம் போன்றவை ரொம்பப் பிடிக்கும். இவருக்கும் ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு. சாமியார்களைப் போலவே தானும் உரை நிகழ்த்த ஆர்வம் காட்டினார். இதனால் போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு பிரசங்கியாக மாறினார்.


மனைவி மட்டுமே குழந்தை கிடையாது: இவருக்கு மனைவி மட்டுமே உண்டு. குழந்தைகள் கிடையாது. இவரும் இவரது மனைவியும் சேர்ந்துதான் சொற்பொழிவுகளில் பங்கேற்பார்கள். போலே பாபாவின் குடும்பம் நல்ல வசதியான குடும்பம்தான். அவர்களில் இவர் மட்டுமே ஆன்மீக சொற்பொழிவாளராக இருந்து வந்துள்ளார். இவருக்குக் கூடப் பிறந்தவர்கள் 2 பேர் உள்ளனர். அதில் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டாராம்.




சொந்த ஊரில் ஆசிரமம்: இவரது சொந்த ஊரிலேயே ஒரு ஆசிரமும் கட்டியுள்ளார் போலே பாபா. அங்குதான் தம்பதி சமேதராக தனது ஆதரவாளர்களை சந்தித்து அருளாசி வழங்குவார். இவரைக் காண அக்கம் பக்கத்து மாவட்டங்கள் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் கூட பலர் வருவார்களாம். ரொம்பப் பிரபலமானவராக இருந்துள்ளார் போலே பாபா. வெளியூர், வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் தங்க இவரது ஆசிரமத்தில் இட வசதியும் செய்யப்பட்டுள்ளதாம்.


ராஜஸ்தானில் செட்டில்: சில வருடங்களுக்கு முன்பு தனக்கு எதிராக சதி நடப்பதாக சந்தேகம் அடைந்தார் போலே பாபா. இதைத் தொடர்ந்து அவர் தனது இருப்பிடத்தை ராஜஸ்தானுக்கு மாற்றி விட்டார். அங்குதான் தஹ்கி வந்தார். கடந்த ஆண்டு தனது ஊருக்குத் திரும்பியவர் தனது சொத்துக்களை ஒரு அறக்கட்டளையாக மாற்றி விட்டார். இதற்கு ஒரு மேனேஜரைப் போட்டு ஆசிரமத்தைப் பராமரித்து வருகிறாராம்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்