லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்ற நபர், அவர்களின் இறந்த உடல்ககளுக்குப் பக்கத்திலேயே 3 நாட்கள் இருந்துள்ளார். அவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் பெயர் ராம் லகான். 32 வயதான இவரது மனைவி பெயர் ஜோதி. 30 வயதாகிறது. அவர்களுக்கு 6 வயதில் பாயல், 3 வயதில் ஆனந்த் என இரு குழந்தைகள் உள்ளனர். தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார் ராம் லகான். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் ராம் லகான். அதேபோல தனது இரு குழந்தைகளையும் கூட ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்தார்.
அதன் பிறகு அவர் வழக்கம் போல தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்துள்ளார். பகல் முழுக்க வேலைக்குப் போய் விடுவார். இரவு வீடு திரும்புவார். இறந்த உடல்களுக்கு அருகேயே படுத்துத் தூங்கியுள்ளார். அவர்கள் இறந்து விட்டதை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இப்படியே 3 நாட்கள் கழிந்துள்ளது.
அவர் வசித்து வந்த வீடு வாடகை வீடாகும். வீட்டிலிருந்து துர்நாற்றம் வெளியாகவே வீட்டு உரிமையாளர் ராம் லகானிடம் என்ன ஏது என்று விசாரித்துள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் தரவில்லை. இதனால் வீட்டுக்குள் போய் என்ன ஏது என்று வீட்டு உரிமையாளர் பார்த்தபோதுதான் இறந்த உடல்களை கோணியைப் போட்டு ராம் லகான் மூடி வைத்திருந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் போலீஸாருக்குத் தகவல் தரவே, அவர்கள் விரைந்து வந்து ராம் லகானைப் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் நடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து லக்னோ தெற்கு துணை போலீஸ் கமிஷனர் டி.எஸ். சிங் கூறுகையில், ராம் லகானுக்கும், அவரது மனைவிக்கும் 7 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சமீப காலமாக இவரது மனைவி மீது இவருக்கு சந்தேகம் வந்துள்ளது. அவருக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதியும் இதுபோல தகராறு ஏற்பட்டது. அப்போதுதான் தனது மனைவி, குழந்தைகளைக் கொன்றுள்ளார் ராம் லகான். அவரைக் கைது செய்துள்ளோம். கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் அவர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}