மதுரை: கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் வீட்டிலேயே வைத்துச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபல இயக்குனர் மணிகண்டன். இவர் காக்கா முட்டை, கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். குறிப்பாக இவர் இயக்கிய காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருதுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. திரைப்பட வேலை காரணமாக சென்னை சென்ற இயக்குனர் குடும்பத்தினர் கடந்த இரண்டு மாதங்களாக வசித்து வருகின்றனர். அப்போதுதான் கடந்த 8ஆம் தேதி இவரது வீட்டில் கொள்ளை நடந்தது.
மணிகண்டன் வசித்து வந்த வீட்டில் ஓட்டுனர்கள் ஜெயக்குமார் மற்றும் நரேஷ் குமார் ஆகியோர் தினமும் அவர் வளர்க்கும் நாய்க்கு வழக்கமாக உணவு கொடுத்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பதறிப்போய் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், இரண்டு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், ஐந்து பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தனர்.
இதனை அடுத்து டிஎஸ்பி நல்லு தலைமையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மணிகண்டன் வீட்டுக் கதவில் ஒரு கேரி பேக் தொங்க விடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் வந்து பார்த்தபோது அதில் ஒரு துண்டுத் தாளில் "ஐயா எங்களை மன்னித்து விடுங்கள்.. உங்கள் உழைப்பு உங்களுக்கு".. என்று எழுதப்பட்டிருந்தது. பையில், கொள்ளையடித்த பதக்கங்கள் இருந்தன.
இயக்குநர் வீடு என்று தெரிய வந்ததாலும், போலீஸார் தீவிரமாக தேடி வந்ததாலும் பயந்து போய் திருடிய பொருட்களை திருடர்கள் வைத்து விட்டுப் போயிருக்கலாம் என்று தெரிகிறது.
Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
{{comments.comment}}