தமிழ் வம்சாவளியைத் தொடர்ந்து.. தெலுங்கு கனெக்ஷன்.. அமெரிக்க அதிபர் தேர்தலைக் கலக்கும் தென்னிந்தியா!

Jul 16, 2024,05:16 PM IST

வாஷிங்டன்: கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வான்ஸ் வெற்றி பெற்றால், தெலுங்கு பேசும் மக்களுக்கு பெருமை கிடைக்கும். காரணம், வான்ஸ் மனைவியின் பூர்வீகம் ஆந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு வம்சாவளியினர் லைம்லைட்டுக்கு வருவதால் இந்தியர்கள் குறிப்பாக தென்னிந்தியர்களிடையே பரவசம் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபர் பதவிக்கு வந்த முதல் ஆசிய அமெரிக்கர், முதல் தமிழ் வம்சாவளி அமெரிக்கர், முதல் ஆசிய அமெரிக்க  பெண், முதல் ஆசியர் என்று பல பெருமைகளை படைத்தவர் கமலா ஹாரிஸ். தற்போதைய அதிபர் ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.


தற்போதைய அதிபர் தேர்தலிலும் ஜோ பைடனும், கமலாஹாரிஸும் மீண்டும் களம் குதித்துள்ளனர். அவர்களுக்கு எதிர்முனையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி. வான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஜே.டி.வான்ஸின் மனைவி பெயர் உஷா சிலிகுரி வான்ஸ். இவரது பூர்வீகம் தென்னிந்தியா. அதாவது ஆந்திர மாநிலம். இவரது பெற்றோர் பெயர் கிருஷ் சிலிகுரி மற்றும் லட்சுமி சிலிகுரி. இருவரும் பேராசிரியர்கள். கலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ நகரில் செட்டிலானவர்கள். இங்குதான் உஷாவும் பிறந்தார். சிறு வயது முதலே படிப்பு படிப்பு என்று இருப்பாராம். புத்தகப் புழு என்றுதான் இவரை நண்பர்கள் அழைப்பார்கள். வரலாறு, சட்டம் என்று பல துறைகளில் பட்டம் பெற்றுள்ளார் உஷா சிலிகுரி. புகழ் பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தவர். 




ஏல் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் தனது வருங்காலக் கணவர் வான்ஸை சந்தித்தார்.  காதலித்து இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.  உஷா இந்துப் பெண், இவரது கணவர் ரோன் கத்தோலிக்க கிறிஸ்தவர். இருவரும் அவரவர் மதங்களைப் பின்பற்றுகின்றனராம். இவர்களுக்கு இவான், விவேக் என்ற இரு மகன்களும், மீரா பெல் என்ற மகளும் உள்ளனர்.


வான்ஸ் துணை அதிபராக வெற்றி பெற்றால், கூடவே உஷா சிலிகுரியும் லைம்லைட்டுக்கு வருவார். கடந்த முறை தமிழ்நாட்டு மக்கள் கமலா ஹாரிஸைக் கொண்டாடினர். அதேபோல இந்த முறை தெலுங்கு பேசும் மக்களுக்குக் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்