சார்லட், வடக்கு கலிபோர்னியா: அமெரிக்காவில், ஆசிரியையுடன் ரகசிய உறவு வைத்திருந்த மகனை, டிராக்கிங் ஆப் வைத்து கண்டுபிடித்துள்ளார் அவனது அம்மா.
ரக்பி விளையாடப் போவதாக கூறி விட்டு அடிக்கடி வெளியே போயுள்ளான் மகன். ஆனால் அவன் விளையாடப் போகவில்லை என்று அம்மாவுக்குத் தெரிய வந்து குழப்பமடைந்தார். இதையடுத்து மகன் எங்கே போகிறான் என்பதைக் கண்டறிய டிராக்கிங் ஆப்பைப் பயன்படுத்தியுள்ளார். அதில்தான் இந்த சில்மிஷம் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர் பயன்படுத்திய Life360 என்ற டிராக்கிங் ஆப் ஏற்கனவே அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு அறிமுகமான ஆப் இது.
சம்பந்தப்பட்ட பையனின் வயது 18 ஆகும். அவனுக்கும் அவனது 26 வயதான ஆசிரியைக்கும் இடையே ரகசிய உறவு இருந்துள்ளது. அந்த டீச்சரின் பெயர் கேப்ரியலா கார்தயா நியூபெல்ட். இவர் தெற்கு மெக்கலன்பர்க் உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தப் பையன் தனது வீட்டில் ரக்பி பயிற்சிக்குப் போவதாக கூறி விட்டு வெளியே போவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் அவன் அங்கு போகவில்லை என்று அவனது அம்மாவுக்குத் தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் டிராக்கிங் ஆப்பைப் பயன்படுத்தி ஒரு நாள் மகனைக் கண்காணித்துள்ளார். அப்போது மகன், பார்க் ரோட் பார்க்குக்குப் போனது தெரிய வந்தது.
உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அங்கு போய்ப் பார்த்தால், அந்த டீச்சருடன் மகன் கசமுசா நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காருக்குள்ளேயே இருவரும் சேட்டையில் ஈடுபட்டிருந்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருவரையும் போட்டோ எடுத்துள்ளார். மேலும் காரையும் போட்டை எடுத்தார். அதன் பிறகு உரிய அதிகாரிகளிடம் இதுகுறித்துப் புகார் கொடுத்தார்.
விசாரணையின்போது பல்வேறு இடங்களில் வைத்து இருவரும் சந்தித்துக் கொண்டது தெரிய வந்தது. பள்ளி வளாகத்திலும் கூட இவர்கள் கசமுசாவில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தற்போது அந்த ஆசிரியை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}