வாஷிங்டன்: சீனா அனுப்பிய மர்ம பலூனை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது தேவையில்லாத செயல். இதற்கு உரிய பதில் கொடுப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவிலிருந்து ராட்சத மர்ம பலூன்கள் விண்ணில் பறக்க விடப்பட்டன. இதில் 2 பலூன்கள் அமெரிக்க வான் எல்லையில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வட அமெரிக்கக் கண்டத்தில் 2 பலூன்கள் பல நாட்களாக சுற்றி வந்தன. வானிலை தொடர்பான ஆய்வுக்காக இவை அனுப்பப்படுவதாக சீனா கூறினாலும் கூட இவற்றை உளவு பலூன்கள் என்று அமெரிக்கா கூறியது.
இவற்றை சுட்டு வீழ்த்த அமெரிக்கப் படையினர் முடிவு செய்தனர். ஆனால் நிலப்பரப்பில் பலூனை சுட்டு வீழ்த்தினால் ,அதன் பாகங்கள் கீழே சிதறி மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் கடல் பக்கம் அது போனதும் சுட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, தெற்கு கரோலினா மாகாணத்தின்மீது அட்லான்டிக் கடலோரமாக பறந்து வந்த பலூனை அமெரிக்காவின் எப் 22 போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சுட்டு வீழ்த்தியது. இதனால் அந்த பலூன் உடைந்து சிதறி அதன் பாகங்கள் கடலில் விழுந்தன.
பலூன் கடற் பரப்பில் பறப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதை இப்போது சுட்டு வீழ்த்தலாம் என்று பாதுகாப்புத்துறையினர் ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து, அதற்கான உத்தரவை அதிபர் பிடன் பிறப்பித்தார். இதையடுத்து விர்ஜீனியா விமானப்படைத் தளத்திலிருந்து ஒரே ஒரு ஏவுகணையுடன் கிளம்பிய எப் 22 போர் விமானம், பலூனை துல்லியமாக சுட்டு வீழ்த்தியது. பலூன் முற்றிலும் கடலிலேயே விழுந்தால் எந்தவிதமான பொருட் சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பலூன் உடைந்து கடலில் விழுந்ததைத் தொடர்ந்து அதன் உதிரி பாகங்களை கண்டுபிடிக்க நீச்சல வீரர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் சேகரித்துக் கொண்டு வரும் பலூன் பாகங்களைக் கொண்டு ஆய்வு நடத்தி அவை என்ன என்பது குறித்து அறியப்படும்.
அமெரிக்கப் படையினரின் இந்த நடவடிக்கையை அதிபர் ஜோ பிடன் பாராட்டியுள்ளார். அதேசமயம், அமெரிக்கா தேவையில்லாத வேலையைச் செய்துள்ளதாகவும், இது பெரும் ஏமாற்றத்தைத் தருவதாகவும், இதற்கு உரிய பதில் கொடுக்கப்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
ஆனால் இது சட்டப்பூர்வமான, அவசியமான நடவடிக்கை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார். அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் எதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவுக்கு முழு உரிமை உள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக சீனா செல்லவிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன், இந்த பலூன் விவகாரம் தொடர்பாக தனது பயணத்தை தள்ளிப் போட்டு விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
வட அமெரிக்காவில் ஒரு பலூன் தென்பட்ட நிலையில் லத்தீன் அமெரிக்க எல்லையில் இன்னொரு பலூன் தென்பட்டதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சீன பலூன்கள் பிற நாடுகள் மீது பறப்பது இது முதல் முறஐயல்ல. இதற்கு முன்பு கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளின் வான் எல்லைகளிலும் சீன பலூன்கள் பறந்த���ள்ளன.
{{comments.comment}}