US presidential election results 2024: வேகம் எடுக்கும் கமலா.. 210 வாக்குகள்.. டிரம்ப்புக்கு 230!

Nov 06, 2024,10:38 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேகமாக முன்னேறி வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. விறுவிறுப்பாக நடந்து முடிந்த வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்குகள் எண்ணும் பணி உடனடியாகத் தொடங்கியது. தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் முன்னணியில் உள்ளார். அவர் இதுவரை 230 எலக்டோரல் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்குக் கிடைத்த மக்கள் வாக்குகள் 4 கோடியே 88 லட்சத்து 53 ஆயிரத்து 546 ஆகும்.  



கமலா ஹாரிஸ் தற்போது திடீரென வேகம் எடுத்து 210 எலக்டோரல் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்குக் கிடைத்த மக்கள் வாக்குகள் 4 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரத்து 169 ஆகும். 270 எலக்டோரல் வாக்குகளைப் பெறுபவரே அதிபராக வெற்றி பெற முடியும். தற்போதைய சூழ்நிலையில் டிரம்ப் முன்னணியில் இருந்து வருவதால் அவரது கை ஓங்கியுள்ளது. ஆனால் கமலா ஹாரிஸ் வேகம் பிடித்து வருவதால் திருப்பத்தை எதிர்பார்க்கலாமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செனட் சபையைப் பொறுத்தவரை 50 இடங்களில் வெல்பவரே சபையைக் கைப்பற்ற முடியும் குடியரசுக் கட்சியினர் இதுவரை 48 இடங்களை வென்றுள்ளனர்.  இன்னும் 2 இடங்கள் கிடைத்தால் சபை அவர்களது வசமாகி விடும்.  அதற்கே தற்போது வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. ஜனநாயகக் கட்சி 36 இடங்களிலேயே வென்றுள்ளனர். 

பிரதிநிதிகள் சபையைப் பொறுத்தவரை குடியரக் கட்சி 153 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஜனநாயகக் கட்சிக்கு 101 இடங்கள் கிடைத்துள்ளன. 218 இடங்களைப் பெறுவோர் சபையைக் கைப்பற்ற முடியும். இங்கு கடும் போட்டா போட்டி நிலவுவதால் சபை யார் வசமாகும் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு படைத்த வேட்பாளர்கள்

அமெரிக்க தேர்தலில் பலர் புதிய வரலாறு படைத்துள்ளனர். விர்ஜீனியா மாகாணத்திலிருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை சுஹாஸ் சுப்ரமணியம் பெற்றுள்ளார். இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

ஜனநாயகக் கட்சியின் யாஸ்வின் அன்சாரி, காங்கிரஸ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஈரானிய அமெரிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளர் என்ற பெருமையைப் பெறுகிறார். அரிஸோனாவில் இவர் வென்றுள்ளார்.

டெலவரேவைச் சேர்ந்த லிசா பிளன்ட் ரோசெஸ்டர், அந்த ஊரிலிருந்து செனட் சபைக்கு தேர்வான முதல் கருப்பர் மற்றும முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

காங்கிரஸ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் டிரான்ஸ்ஜென்டர் வேட்பாளர் என்ற சாதனையை சாரா மெக்பிரைட் படைத்துள்ளார். மேரிலான்டின் முதல் கருப்பர் இன செனட்டர் என்ற பெருமை ஏஞ்சலா ஆல்சோப்ரூக்ஸுக்குக் கிடைத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்