ஓவர் லீவு.. புதிய வரலாறு படைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. மொத்தம் 532 நாட்கள்!

Sep 08, 2024,06:05 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறக் காத்திருக்கும் ஜோ பைடன், புதிய வரலாறு ஒன்றைப் படைத்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் விடுமுறை எடுத்துள்ளாராம் ஜோ பைடன். தனது பதவிக்காலத்தில் இதுவரை மொத்தம் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.


81 வயதாகும் ஜோ பைடன் இன்னும் தனது பதவிக்காலத்தின் 4 ஆண்டுகளை முழுமையாக முடிக்கவில்லை. அவர் இதுவரை எடுத்துள்ள விடுமுறைகளைக் கணக்கிட்டால் அவரது மொத்தப் பதவிக்காலத்தில் 40 சதவீத நாட்களை விடுமுறையில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அவரது வயதும், உடல் நிலையும் கூட இந்த அளவுக்கு அதிக விடுமுறை எடுக்கக் காரணமாக கருதப்படுகிறது. வயோதிகம் காரணமாகவே அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி அவருக்குப் பதில் தற்போது கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார் என்பது நினைவிருக்கலாம்.




ஜோ பைடன் எடுத்துள்ள விடுமுறையானது, 50 ஆண்டுகளில் ஒரு அமெரிக்கர் சராசரியாக எடுக்கும் விடுமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஒரு அமெரிக்கர் சராசரியாக வருடத்திற்கு 11 நாட்கள்தான் விடுமுறை எடுக்கிறார்களாம். ஆனால் அவர்களை மிகப் பெரிய அளவில் பின்னுக்குத் தள்ளியுள்ளார் அதிபர் பைடன்.


இதுகுறித்து டிரம்ப் காலத்தில்  வெள்ளை மாளிகையின் பட்ஜெட் அலுவலக ஜெனரல் கவுன்சலாக இருந்தவரான மார்க் பாலோட்டா கூறுகையில், அதிபரின் இந்த விடுமுறை நாட்கள் தேவையற்றவை. உள்நாட்டில் பல்வேறு சவால்கள் நிலவி வரும் நிலையில், சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகள், ஸ்திரமின்மை நிலவி வரும் நிலையில் அதிபர் இத்தனை நாட்கள் விடுமுறை எடுத்தது தவறானது. அமெரிக்காவும், உலகமும் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது ஜாலியாக பீச்சில் சேர் போட்டு அதிபர் பைடன் தூங்கி ஓய்வெடுப்பதை சகிக்க முடியவில்லை என்றார் அவர்.


ஆனால் பைடன் ஆதரவாளர்களோ, அதிபர் விடுமுறையில் போனாலும் கூட தனது பணிகளை ஆற்றிக் கொண்டுதான் இருந்தார். தினசரி தொலைபேசி கால்கள், வீடியோ கால்கள் மூலமாக ஆலோசனைகள் நடத்திக் கொண்டுதான் இருந்தார். எங்கிருந்து வேலை பார்க்கிறோம் என்பது முக்கியமில்லை. வேலை முறையாக நடக்கிறதா என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது என்று  அவர்கள் பைடனுக்கு ஆதரவாக வாதிடுகிறார்கள்.


இதற்கு முன்பு இருந்த அமெரிக்க அதிபர்களில் பராக் ஒபாமாவும், ரொனால்ட் ரீகனும் தலா 11 சதவீத அளவிலான விடுமுறையே எடுத்துள்ளனர். இவர்கள் இருவருமே தலா 2 முறை அதிபர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஜிம்மி கார்ட்டர் தனது 4 ஆண்டு கால பதவிக்காலத்தில் மொத்தமே 79 நாட்கள்தான் விடுமுறை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்