வாஷிங்டன்: இஸ்ரேலின் அசுரத்தனமான தாக்குதலால் அப்பாவி பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்.
ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். தனது வான்வெளித் தாக்குதல் மூலம் காஸா பகுதியை நிர்மூலமாக்கிய இஸ்ரேல் தற்போது தரை வழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இதனால் அப்பாவிகள் பலர் பலியாகும் அபாயம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறுபக்கம் உலக அளவில் இஸ்ரேலின் தாக்குதலை பலரும் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிப்போரும் கூட தாக்குதலை குறைத்து விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
இஸ்ரேலை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அமெரிக்கா, தற்போது இஸ்ரேலுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பைத் தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்களுடன் பேசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேலைக் காப்பாற்றும் Damage control நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் ஆகியோரை அதிபர் பிடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இப்படி ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட இஸ்ரேலுக்கு உதவ மறுபக்கம் போர் விமானங்களையும், போர்க்கப்பலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துக் கொண்டுதான் உள்ளது.
பாலஸ்தீன அதிபருடன் பிடன் பேசுகையில், ஹமாஸ் நடவடிக்கையைக் கண்டித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும், சுய நிர்ணயத்துக்கும், கெளரவத்துக்காகவும் துணை நிற்கும் தகுதி ஹமாஸுக்கு இல்லை என்றும் பிடன் கூறியுள்ளார். நதன்யாஹுவிடம் பேசும்போது, அந்த நாட்டின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை சரியே என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்ளுமாறும் நதன்யாகுவை பிடன் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் போர் பாதித்த பகுதிகளில் அப்பாவி மக்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பது தடைபடக் கூடாது என்றும் பிடன், நதன்யாகுவிடம் ஆலோசித்துள்ளார். இதுதொடர்பாக ஐ.நா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் பிடன் ஆலோசித்துள்ளார். அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் பிடன் கூறியுள்ளார்.
அதேசமயம், பாலஸ்தீன மக்களின் உயிர்களுக்கு மிரட்டலாக மாறியுள்ள ஹமாஸ் அமைப்பின் செயல்பாடுகளை அனைத்து நாடுகளும் கண்டிக்க வேண்டும் என்றும் பிடன் அழைப்பு விடுத்துள்ளார்.
மறுபக்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் முஸ்லீம் நாடுகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். ரியாத் சென்ற அவர் அங்கு சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பைசல் பின் பர்ஹானை சந்தித்துப் பேசினார். பின்னர் அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயத் அல்நஹன்யானை சந்தித்துப் பேசினார். முஸ்லீம் நாடுகளின் ஆதரவை, இஸ்ரேலுக்கு திருப்பும் அமெரிக்க முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}