வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பமாக டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். அவர் வெற்றி பெற்று அதிபரானால் பல சாதனைகளைப் படைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக இந்தியாவுக்கு மிகச் சிறப்பான ஒரு பெருமை கிடைக்கும். உலகின் நம்பர் 1 வல்லரசு நாட்டின் அதிபரான முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற இரட்டை சாதனை இந்தியாவுக்கு கிடைக்கும். அதேபோல அமெரிக்க அதிபர் பதவிக்கு உயர்ந்த முதல் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர், முதல் தமிழ்நாட்டு வம்சாவளி பெண் என்ற பெருமையும் நம்ம தமிழ்நாட்டுக்கும் கிடைக்கும்.
தமிழ்நாட்டு வரலாறு
கமலா தேவி ஹாரிஸ் என்ற இயற்பெயர் கொண்ட கமலா ஹாரிஸ், 1964ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆக்லாந்த் நகரில் பிறந்தவர். இவரது தாயார் பெயர் ஷியாமளா தேவி கோபாலன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவில் பல்வேறு ஆய்வுப் படிப்புகளை முடித்த பின்னர் அமெரிக்காவில் பிஎச்டி முடித்தவர். இவரது கணவர் பெயர் டொனால்ட் ஹாரிஸ். இவரது பூர்வீகம் ஜமைக்கா ஆகும். ஆசிய - அமெரிக்கரான ஷியாமளாவும், ஆப்பிரிக்க அமெரிக்கரான டொனால்ட் ஹாரிஸும் இணைந்து தங்களது இல்லற வாழ்க்கையைத் தொடங்கினர்.
வழக்கறிஞரான கமலா ஹாரிஸ் படிப்படியாக உயர் பதவிகளை அடைந்தவர். கலிபோர்னியா மாகாணத்திலிருந்து 20 வருடங்கள் செனட் உறுப்பினராக செயலாற்றியவர். 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது துணை அதிபர் பதவிக்கு நிறுத்தப்பட்டார். ஜோ பிடனுடன் இணைந்து இவரும் வெற்றி பெற்று பெற்று புதிய வரலாறு படைத்தார். கமலா ஹாரிஸின் கணவர் பெயர் டோக் எம்ஹாப். இவர் யூதர் ஆவார்.
காத்திருக்கும் சாதனைகள்
அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் பல சாதனைகளைப் படைப்பார். அமெரிக்காவின் முதல் பெண் அதிபர், அமெரிக்காவின் முதல் கருப்பினப் பெண் அதிபர், அமெரிக்காவின் முதல் இந்தியா வம்சாவளி பெண் அதிபர், அமெரிக்காவின் முதல் ஆப்ரோ - அமெரிக்க பெண் அதிபர், அமெரிக்காவின் முதல் தமிழ் - அமெரிக்க வம்சாவளி பெண் அதிபர் என பல பெருமைகள் இவருக்குக் கிடைக்கும்.
அதேபோல துணை அதிபர் பதவியில் இருந்து அதிபர் பதவிக்கு உயர்ந்த முதல் பெண்ணாகவும் இவர் உருவெடுப்பார். அதேபோல ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையும் கமலா ஹாரிஸுக்குக் கிடைக்கும்.
டிரம்ப்பை வீழ்த்துவோம் - கமலா ஹாரிஸ் உறுதி
ஜோ பிடன் அறிவிப்பைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க மக்களின் சார்பாக அதிபர் ஜோ பிடனுடைய மிகச் சிறந்த தலைமைத்துவத்துக்கும், அவரது நீண்ட கால நாட்டுப் பணிக்கும் மிகப் பெரிய நன்றி தெரிவிக்கிறேன். அதிபர் எனது பெயரை பரிந்துரைத்துரைத்திருப்பதை கெளரவமாக கருதுகிறேன். வேட்பாளராக நான் வெற்றி பெற உறுதியோடு இருக்கிறேன்.
ஜனநாயகக் கட்சியை வலிமைப்படுத்தி, அனைவருடனும் இணைந்து டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடிக்க நான் தீவிரமாக உழைக்கப் போகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார் கமலா ஹாரிஸ்.
இந்தியர்கள் - இந்திய வம்சவாளியினர் மகிழ்ச்சி
கமலா ஹாரிஸ் வேட்பாளராக வேண்டும் என்று ஜோ பிடன் அறிவித்திருந்தாலும் கூட அக்கட்சியின் மாநாட்டில்தான் அவர் தேர்வு செய்யப்படுவது குறித்துத் தெரியும். ஆனால் கமலா ஹாரிஸுக்கு அபரிமிதமான ஆதரவு காணப்படுவதால் நிச்சயம் அவர் வேட்பாளராவது உறுதி. அதேபோல அவரது வெற்றியும் உறுதி என்று இந்திய - அமெரிக்க வம்சாவளியினர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
இந்திய அமெரிக்கரான ஜனநாயகக் கட்சியின் அஸ்வின் ராமசாமி, கமலா ஹாரிஸ் மாபெரும் வெற்றி அடைவார் என்று கணித்துள்ளார். இவரும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான்.
இந்திய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீ தானேதார் கூறுகையில், கமலா ஹாரிஸ் மிகச் சிறந்த தலைவர். இரும்புப் பெண்மணி. முடிவுகளை உறுதியாகவும், தெளிவாகவும் எடுக்கக் கூடியவர். செனட்டராக சிறப்பாக செயல்பட்ட அவர் துணை அதிபர் பதவியிலும் சிறப்பாகவே செயல்பட்டார். அதேபோல அதிபராகவும் அவர் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளிப்பார் என்றார்.
நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை
{{comments.comment}}