என்ன ஆச்சரியம்.. 2 வது மாடியிலிருந்து குதித்த கர்ப்பிணி.. அழகான குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்!

May 28, 2024,05:37 PM IST

மிச்சிகன்:   அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது 2வது மாடி ஜன்னல் வழியாக, கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலிருந்து குதித்த கர்ப்பிணிக்கு பலத்த அடி பட்டபோதிலும் கூட அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


அதிர்ஷ்டம் என்பது அனைவருக்கும் நடந்து விடக்கூடிய சாதாரண விஷயம் என்பது கிடையாது‌. அதிர்ஷ்டம் என்பதே முதலில் அதிசயமானது. திடீரென நிகழக் கூடியது. நிகழும்போது அது கொடுக்கும் பலன்களும், சந்தோஷமும், சர்ப்பிரைஸும், விலை மதிக்க முடியாததாக இருக்கும்.




அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இப்படித்தான் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் அந்தப் பெண்ணுக்கே கூட இதை பெரிய சர்ப்பிரைஸ்தான். அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி ரேச்சல் ஸ்டேன்ட்பாஸ்ட் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகளைக் கொண்டதாகும். அந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ரேச்சல் என்ன செய்வதென்று அறியாமல் தன் வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்காக 2வது மாடியிலிருந்து கிட்டத்தட்ட  20 அடி உயரத்திலிருந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார். 


இதனால்அவருக்கு பின் தலையில் அடிபட்டது. உடம்பிலும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக அவருக்கு சிசேரியன் செய்யப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்தனர். அவர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.


ஒரு கர்ப்பிணியாக இல்லாமல் சாதாரண பெண்ணாக இருந்து குதித்து இருந்தாலும்  உயிர் பிழைப்பது என்பது கஷ்டம். ஆனால் இந்தப் பெண்மணி உயிர் தப்பித்தது மட்டுமல்லாமல் குழந்தையையும் நலமாக பெற்றெடுத்துள்ளார். இது அனைவரையும் மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


தனது குழந்தைக்கு ப்ரைனெல் ரோஸ் என பெயர் சூட்டி உள்ளார் ரேச்சல்..தாயும், சேயும் சூப்பர் நலமாக உள்ளனராம்.


சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்