விமானப் பணியாளரை.. இழுத்துப் பிடித்து முத்தமிட்ட பயணி.. நடுவானில் அக்கப்போர்!

Apr 23, 2023,10:00 AM IST
மின்னசோட்டா: அமெரிக்காவில் ஓடும் விமானத்தில் ஆண் விமானப் பணியாளரை இழுத்துப் பிடித்து கழுத்தில் முத்தமிட்ட ஆண் பயணியை போலீஸார் கைது செய்தனர்.

அந்த பயணியின் பெயர் டேவிட் ஆலன் பர்க். 61 வயதாகிறது. இவர் மின்னசோட்டாவிலிருந்து அலாஸ்காவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் போய்க் கொண்டிருந்தார். தனது இறந்து போய் விட்ட நண்பரின் பண்ணையை இவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அதை செட்டில் செய்யும் விஷயமாக போய்க் கொண்டிருந்தபோதுதான் புத்தி தடுமாறி இப்படி பண்ணி விட்டார்.

முதல் வகுப்பில் டேவிட் பயணித்துக் கொண்டிருந்தார். மின்னபோலிஸ் நகரிலிருந்து விமானம் கிளம்பியபோது அவர் மது அருந்த விரும்பியுள்ளார். ஆனால் மது பரிமாறுவதற்கான டைம் முடிந்து விட்டதாக விமானப் பணியாளர் கூறியுள்ளார்.  அதன் பிறகு விமானம் கிளம்பிய பிறகு டேவிட்டுக்கு அந்த விமானப் பணியாளர் ஒயின் ஊற்றிக் கொடுத்துள்ளார். டேவிடும் சந்தோஷமாக வாங்கிக் கொடுத்தார். அதேபோல சாப்பாடும் வந்தது. அதையும் சாப்பிட்டார். சாப்பிட்ட தட்டை எடுக்க வந்த அதே விமானப் பணியாளருக்கு ஜாலியாக கைகுலுக்கவும் செய்தார் டேவிட்.




10 நிமிடம் கழித்து ரெஸ்ட் ரூம் போவதற்காக எழுந்து சென்றார் டேவிட். போகும் வழியில் அந்த விமானப் பணியாளர் அமர்ந்திருப்பதைப் பார்த்த டேவிட் அவரிடம் சென்றார். அருகே போய் நீ ரொம்ப அழகா இருக்கியே.. எனக்கு ஒரு முத்தம் தர்றியா என்று கேட்டுள்ளார். அதைக் கேட்டு ஜெர்க் ஆன அந்த ஊழியர், "நோ, தேங்க்ஸ்" என்று சொல்லி விலகியுள்ளார். ஆனால் "No means NO" என்ற "அஜீத் பட வசனத்தை" மறந்த டேவிட் முரட்டுத்தனமாக அந்தப் பணியாளரை இழுத்து கழுத்தில் முத்தம் கொடுக்க முயன்றார். என்னடா இது வம்பாப் போச்சே என்று மிரண்டு போன அந்த ஊழியர், டேவிட்டிடம் இருந்து கஷ்டப்பட்டு விலகினார்.

அதன் பின்னர் அந்த இடத்தைக் காலி செய்த  ஊழியர் விமானத்தின் பின் பகுதிக்குப் போய் விட்டார். பயணம் முடியும் வரை  அதாவது கிட்டத்தட்ட ஆறு மணி நேரமும் அவர் முன் பகுதிக்கு வரவே இல்லை.  விமானம் தரையிறங்கிய பின்னர் விமான ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் டேவிட் கைது செய்யப்பட்டார். விமானப் பணியாளருக்கு முத்தம் கொடுத்தது மட்டுமல்லாமல் சில சாப்பாட்டுத் தட்டுக்களையும் உடைத்துள்ளார் டேவிட். எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்