சும்மாவே கலவரமா இருக்கு.. இதுல ஆட்டோமேட்டிக் மெஷின் மூலம் தோட்டா விற்பனை.. அமெரிக்காவில்!

Jul 10, 2024,11:36 AM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் சும்மாவே தினசரி ஒரு துப்பாக்கிச் சூடு என்ற விகிதத்தில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சூப்பர் மார்க்கெட்களில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் துப்பாக்கித் தோட்டாக்களை விற்க ஆரம்பித்திருக்கிறது. இது பெரும் சலசலப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனையும், துப்பாக்கியின் பயன்பாடும் சர்வசாதாரணமாக உள்ளது. அங்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதும், லைசென்ஸ் பெறுவதும் ரொம்ப சுலபமானது. இதனால் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், சட்டவிரோதமாகவும் அங்கு துப்பாக்கிளை வெகு எளிதாக வாங்க  முடியுமாம். அமெரிக்காவில் பெரும்பாலானவர்கள் துப்பாகி லைசன்ஸ்சும் வைத்துள்ளார்களாம்.




இப்படிப்பட்டவர்கள்  தங்களுக்கு வேண்டிய துப்பாக்கித் தோட்டாக்களுக்காக இனி  எங்கேயும் அலைய வேண்டாம். இதற்கும் ஆட்டோமேட்டிக் வென்டிங் மெஷின்களை உருவாக்கி விட்டார்கள். அதாவது ஏடிஎம் இயந்திரம் போல இவை செயல்படும். காசு போட்டால் போதும், தோட்டாக்களை அது துப்பும்.


முதற்கட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாகாணங்களில் மளிகை ஸ்டோர்களில் இந்த வென்டிங் மெஷின்களை வைத்துள்ளனர். தேவையான குண்டுகள் நிரப்பப்பட்ட தானியங்கி கியோஸ்க்குகள் நிறுவப்பட்டுள்ளன. துப்பாக்கி குண்டு வேண்டும் என்போர், தங்கள் துப்பாக்கியின் லைசென்ஸ் ஐடியை ஸ்கேன் செய்த, பின்னர் பணம் செலுத்த வேண்டுமாம்.  அது சரியாக இருந்தால் நமக்குத் தேவையான தோட்டாக்களை அந்த மெஷின் கொடுக்கும்.  24 மணி நேரமும் துப்பாக்கி தோட்டாக்களை இந்த மெஷின் மூலம் வாங்க முடியும்.


துப்பாக்கி லைசென்ஸ் ஸ்கேன் செய்தவுடன் துப்பாக்கி குண்டுகளை வாங்குபவர்களின் முக அடையாளம் சரி  பார்க்கப்படுகிறது. ஏஐ மூலம் இதை சாத்தியமாக்கியுள்ளனர். தோட்டா வாங்குபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை இது உறுதி செய்கிறது என்று இந்த வென்டிங் மெஷின்களை நிறுவியுள்ள அமெரிக்கன் ரவுன்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்து, லூசியானா மற்றும் கொலராடோ மாகாணங்களிலும் இந்த கியாஸ்க்குகள் வரவுள்ளனவாம். அங்கு துப்பாக்கி பயன்பாடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தோட்டா விற்பனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே பெருமளவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் இந்த தோட்டா விற்பனை, குற்றச்செயல்களை மேலும் அதிகரிக்கவே வழி வகுக்கும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்