வாஷிங்டன்: அமெரிக்காவின் 30 நகர நிர்வாகங்களை ஏமாற்றி அந்த நகரங்களுடன் நித்தியானந்தா சாமியாரின் "கைலாசா நாடு" சிஸ்டர் சிட்டி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா டிவி சானல் ஒன்று அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.
சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு 2019ம் ஆண்டிலேயே வெளியேறி விட்டார். அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆரம்பத்தில் இது பெரிதாக பார்க்கப்படவில்லை.
ஆனால் சமீப காலமாக நித்தியானந்தா மீண்டும் செய்திகள் அடிபட ஆரம்பித்திருக்கிறார்.. ஆனால் எல்லாமே தவறான காரணங்களுக்காகத்தான். ஐ.நா. சபைக் கூட்டம் ஒன்றில் சாமியாரின் பெண் பிரதிநிதி பரபரப்பு பேச்சை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் தூதரக ஒப்பந்தம், சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் என்று சரமாரியாக சமூக வலைதளங்களில் பரபரப்பைக் கூட்டிக் கொண்டே போனது கைலாசா குரூப்.
இந்த நிலையில் கைலாசா என்று ஒரு நாடே இல்லாத நிலையில் எப்படி அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட முடியும் என்ற சர்ச்சை அமெரிக்காவில் வெடித்தது. இதையடுத்து கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் போட்டுக் கொண்ட நெவார்க் நகர நிர்வாகம் அதை ரத்து செய்து அறிவித்தது. இந்த தவறு வருத்தம் தருவதாகவும் அது கூறியிருந்தது.
ஆனால் நெவார்க் நகரம் போல கிட்டத்தட்ட 30 அமெரிக்க நகரங்களுடன் கைலாசா குரூப் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் போட்டிருப்பதாக அமெரிக்க டிவி சானல் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அத்தனை நகரங்களின் நிர்வாகத்தினரையும் ஏமாற்றி இந்த ஒப்பந்தத்தை கைலாசா மேற்கொண்டிருப்பதாக அந்த டிவி செய்தி தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக பாக்ஸ் நியூஸ் டிவி வெளியிட்டுள்ள செய்தியில், ரிச்மான்ட், விர்ஜீனியா, டெய்டன், பியூனோ பார்க் உள்பட 30 நகரங்களுடன் கைலாசா கற்பனை நாடு சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அத்தனை நகரங்களுடனும் கலாச்சார பரிவர்த்தனை என்ற பெயரிலும் இந்த சாமியார் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
கூகுளில் போட்டால் எல்லா விவரமும் தெரிந்து விடக் கூடிய சூழலில், எப்படி இந்த அமெரிக்க நகரங்கள் கைலாசா குறித்து எந்தத் தகவலையும் பரிசோதிக்காமலேயே ஒப்பந்தம் போட்டன என்பது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த நிலை நீடித்தால் யார் வேண்டுமானாலும் ஏதாவது பொய் சொல்லி அவர்களது பெயரைக் கூட தெருவுக்கு சூட்டும் அபாயகரமான நிலை நிலவுவதாகவும் அந்த செய்தி எச்சரித்துள்ளது.
இதை விட என்ன கொடுமை என்றால் 2 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், கைலாசா நாட்டை அங்கீகரித்திருப்பதுதான்.! அதில் ஒருவர் நார்மா டாரஸ். இன்னொருவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிராய் பால்டர்சன் ஆவார்.
விட்டால் அதிபர் ஜோ பைடனுடன் செல்பி எடுத்து அவருடனும் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கைலாசா குரூப் சொன்னாலும் சொல்லக் கூடும்.. எப்படி இருந்த அமெரிக்கா.. இப்படி ஆகிப் போச்சே!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}