UPSC civil services.. யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் பிப்.,11 வரை விண்ணப்பிக்கலாம்

Jan 22, 2025,06:22 PM IST

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


ஆண்டுக்கு ஒரு முறை யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2025ம் ஆண்டிற்கான   தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட  பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படிநிலைகளைக் கொண்டது. இந்த தேர்வின் மூலம் 979 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


முதல்நிலைத் தேர்வு வருகிற மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிப்போர் யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான https://upsc.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணபிப்போர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்டி,எஸ்சி உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இத்தேர்விற்கு 21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரை காலை 9.30 முதல் 11.30 வரை முதல்தாள் பொது அறிவு தேர்வும், பிற்பகலில் 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறி 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 


தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தேர்விற்கு விண்ணப்பிப்போர் தங்களது மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி வைத்து மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கு தேவையான சான்றிதழ்களை தேவையான அளவில் பென் டிரைவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு மொத்தம் 80 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்