டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் தான் இறக்க விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கோரி பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டிடம் அறிக்கை கோரியுள்ளார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்.
சக ஆண் நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு தான் ஆளாவதாகவும், இதனால் வாழ விரும்பவில்லை என்றும் அந்த பெண் நீதிபதி குமுறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் நீதிபதி தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கிடத்தில், கெளரவமான முறையில் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். எனது வாழ்க்கை டிஸ்மிஸ் ஆனதாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார் அந்த நீதிபதி. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி சந்திரசூட் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளார்.
தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனலருக்கு, உச்சநீதிமன்ற செகரட்டி ஜெனரல் அதுல் குரேகர் கடிதம் எழுதி இந்த விவகாரம் தொடர்பான முழு விவரத்தையும் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக அந்த பெண் நீதிபதி எழுதியுள்ள கடிதத்தில், பாரபங்கியில் நான் பணியாற்றியபோது, ஒரு மாவட்ட நீதிபதியும், அவரது உதவியாளர்களும் என்னைக் குப்பை போல நடத்தினார்கள். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். தேவையில்லாத உயிராக என்னை நான் கருகிறேன்.
2023ம் ஆண்டு ஜூலை மாதம் உயர்நீதிமன்ற உள் விவகார புகார் கமிட்டியிடம் நான் விரிவான புகார் கொடுத்தேன். அதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஆனால் அது வெறும் கண்துடைப்பு விசாரணையாகவே இருந்தது.
இந்த பாலியல் தொல்லையின் சாட்சிகள் அனைவருமே அந்த மாவட்ட நீதிபதியின் கீழ் பணியாற்றுபவர்கள். அப்படி இருக்கும் போது எப்படி அவர்கள் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வருவார்கள்.
விசாரணை முடியும் வரை அந்த நீதிபதியை இடமாற்றம் செய்யுமாறு நான் சுப்ரீம் கோர்ட்டில் கொடுத்த கோரிக்கை வெறும் எட்டு விநாடிகளில் நிராகரிக்கப்பட்டது. நான் விடுத்தது ஒரே ஒரு கோரிக்கைதான்.. அந்த நீதிபதியை இடமாற்றம் செய்யுங்கள், நியாயமான விசாரணை நடத்துங்கள்.. இதுதான் நான் விடுத்த ஒரே கோரிக்கை. ஆனால் அதைக் கூட யாரும் கேட்க இங்கு தயாராக இல்லை.
எனக்கு இனியும் வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடமாக நான் நடைப்பிணமாக வாழ்கிறேன். எனது உடலில் உயிரைத் தாங்கிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. எனது வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இருப்பதாக நான் உணரவில்லை என்று உருக்கமாக கூறியிருந்தார் அந்தப் பெண் நீதிபதி.
Chennai Rains.. சென்னையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழ்நாட்டை மெல்ல மெல்ல நெருங்கி வரும் காற்றழுத்தம்.. இன்றும் நாளையும் அதி கன மழைக்கு வாய்ப்பு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 26, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!
Rain Alert: டெல்டா மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேற வேலை இல்லை.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
அல்லு அர்ஜூனின் புஷ்பா 2.. டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை.. அமெரிக்காவில் அதிரடி சேல்ஸ்
பிறந்த நாளின்போது.. பிளக்ஸ் பேனர்கள், பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்
ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}