பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், தன்னை உறவுக்கு வருமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த நபரை, உறவு கொள்ள அழைத்து, பாதி உறவின்போது அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார் ஒரு பெண். 32 வயதான அந்தப் பெண்ணை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட நபரின் பெயர் இக்பால். கொலை. இவர் ஒரு எம்பிராய்டரி கலைஞர் ஆவார். சம்பந்தப்பட்ட பெண்ணின் கிராமத்துக்கு தொழில் நிமித்தம் அடிக்கடி செல்வார் இக்பால். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கும், இக்பாலுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழக ஆரம்பித்தனர். செல்போன் எண்களையும் பரிமாறிக் கொண்டனர்.
ஒரு நாள் தனது வீட்டுக்கு வருமாறு கூறி அழைத்துள்ளார் இக்பால். அந்தப் பெண்ணும் இக்பால் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென உறவுக்கு வருமாறு அழைத்துள்ளார் இக்பால். இதை எதிர்பாராத அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தாராம். ஆனால் இக்பால் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்தப் பெண், இப்படிப் பேசினால், எனது கணவரிடம் கூறி விடுவேன் என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட இக்பால் கோபமடைந்து, நீ என்னுடன் போனில் பேசிய பதிவெல்லாம் இருக்கிறது. அதை உன் கணவரிடம் நான் காட்டி விடுவேன் என்று பதிலுக்கு மிரட்டியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரது ஆசைக்கு உடன்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து இக்பால் அடிக்கடி அந்தப் பெண்ணை வற்புறுத்தியும், மிரட்டியும் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் எரிச்சலடைந்தார். இதற்கு மேலும் இப்படி நடந்து கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இந்தநிலையில் தான் கடந்த புதன்கிழமையன்று இக்பால் தனது மனைவியை மாமனார் வீட்டில் விடப் போயிருந்தார். அவருக்குப் போன் செய்த இப்பெண், உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இரவில் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார் இக்பால்.
அதன்படி இரவு 8 மணி போல தனது கணவருக்கு தூக்க மாத்திரையைப் போட்டுக் கொடுத்துள்ளார் இப்பெண். அவரது கணவர் செல்போன் பார்த்து விட்டு இரவு 11.40 மணி போல இக்பாலுக்குப் போன் செய்தார். அவரோ, தான் வீட்டில் தனியாகத்தான் இருப்பதாக கூறி அங்கு வரக் கூறியுள்ளார். அங்கு சென்றதும் முதலில் வழக்கம் போல இருவரும் உறவில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். உறவில் ஈடுபட்டு கொஞ்ச நேரம் போனதும், இக்பாலின் இரு கைகளையும் மடக்கிப் பிடித்த அப்பெண் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து வாயை இறுகப் பொத்தி விட்டு, இன்னொரு கையால் அவரது கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் மூச்சுத் திணறி இக்பால் சில விநாடிகளில் இறந்து விட்டார்.
அவர் இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பின்னர் உடலை இழுத்து வெளியே கொண்டு போய் புதரில் போட்டு விட்டு தனது வீட்டுக்குப் போய் விட்டார் இப்பெண். இக்பாலின் உடல் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விசாரணை நடத்தியதில் இப்பெண் கைது செய்யப்பட்டார். இக்பாலின் தொல்லை தாங்காமல் போனதாலும், தனது குடும்பத்தைக் காக்க வேண்டியிருந்ததாலும் இந்த முடிவுக்கு தான் வந்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளாராம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}