ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. மிதக்கும் துபாய்.. இதுவரை 18 பேர் பலி

Apr 17, 2024,10:59 AM IST

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் கொட்டி தீர்த்த கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ரோடுகளில் ஓடுகிறது. இந்த மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழையால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்


கடந்த இரு நாட்களாக ஐக்கிய அரபு நாடுகளில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை காரணமாக  அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 




சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான வாகனங்கள் நீரில்  மூழ்கியுள்ளன. தேசிய சாலைகள், சுரங்க சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அந்த சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கிய விமான நிலையமான துபாய் விமான நிலையம் முழுவதும் மழை  நீர் தேங்கியதால் பெரும்பாலான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.




இந்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேரும், பள்ளி வாகனம் அடித்து செல்லப்பட்டதில் 10 பேரும் பலியாகியுள்ளனர். மழை காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மழை காரணமாக அங்குள்ள பொதுமக்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர். இந்த அளவிற்கான கன மழையை அங்குள்ள மக்கள் பார்த்தது இல்லை என்று கூறி வருகின்றனர்.இந்த மழை மேலும் தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்