தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ. 87 கோடி நிதி.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

Jan 03, 2025,02:39 PM IST

டெல்லி: தமிழ்நாட்டில்  உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த ரூ. 6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154  அகலப்படுத்த ரூ. 18.29 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்தூர் பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த ரூ.20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்  மாவ்டடத்தில் தருமத்துப்பட்டி ஆடலூர்-தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.




இந்த நிதி மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பொருளாதாரச் செயல்பாடுகள் கணிசமாக அதிகரிக்கும். போக்குவரத்து திறனை மேம்படுத்துவதுடன், பயண நேரத்தையும் குறைக்கும். தமிழ்நாடு முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

news

மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!

news

இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!

news

இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!

news

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!

news

வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்