"நீலகிரியில் போட்டியில்லை" .. மீண்டும் ராஜ்யசபா எம்.பியாகிறார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்!

Feb 14, 2024,06:06 PM IST

டெல்லி: மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வருகிற லோக்சபா தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக்க பாஜக முடிவு செய்துள்ளது.


மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருக்கிறார் எல். முருகன். கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது அவர் மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மத்திய அமைச்சரும் ஆனார்.




அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து மீண்டும் அவரை ராஜ்யசபா வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவித்தது. மத்தியப் பிரதேசத்திலேயே அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.


முன்னதாக வருகிற லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதியில் அவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை எதிர்த்துப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவினரும் அங்கு தீவிரமாக களப் பணியாற்றி வந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக மீண்டும் ராஜ்யசபா எம்.பியாகவுள்ளார் எல். முருகன்.


அதேபோல, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆதரவுடன் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.

சமீபத்திய செய்திகள்

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்