தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

Apr 10, 2025,04:38 PM IST

சென்னை: இரண்டு நாள் பயணமாக இன்று இரவு சென்னைக்கு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.


தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். 

முன்னதாக, அதிமுக பாஜக இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறை கூறி வந்த நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிவு ஏற்பட்டு இனி ஒருபோதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 


ஆனால் தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு  அதிமுக பாஜகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் பாஜகவும் அதிமுகவும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இதில் உடன்பாடு ஏற்படாமல் இப்பதவியில் இருந்து விலகி உள்ளார்.




இந்த நிலையில் பாஜக தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் எடுக்க

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, இன்று இரவு 10.15 மணிக்கு சென்னைக்கு வருகிறார். பின்னர், கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் இரவு தங்குகிறார்.


இதனையடுத்து, நாளை  பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட பலரையும் அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரையும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.


அதே சமயத்தில் தமிழக பா.ஜ.க தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முக்கிய ஆலோசனைகளைந எடுக்கலாம் எனவும் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்