ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்.. 3வது மோடி அரசின் முதல் பட்ஜெட்.. நிர்மலா சீதாராமனுக்கு 7வது!

Jul 06, 2024,05:34 PM IST

டெல்லி: 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் மோடி அரசின் முதல் பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். அதேபோல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள 7வது பட்ஜெட்டும் கூட.


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது 3வது மோடி அரசாகும். இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.  இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.




அதன்படி ஜூலை 22ம் தேதி நாடாளுமன்றம் கூடும். அன்றைய தினம் பொருளாதார நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து 23ம் தேதி  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். 


இது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். அதேபோல நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப் போகும் 7வது பட்ஜெட் இது. 3வது மோடி அரசின் முதலாவது பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் ஏராளம் உள்ளன. பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பத்து வருடங்களாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி வகித்து வந்தது. இதில் முதல் ஆட்சியின்போது அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தார். அடுத்த 2வது ஆட்சியில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரானார். அப்போது அவர் 5 முறை பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். அது 6வது பட்ஜெட்டாகும். தற்போது அவர் முழு அளவிலான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவருக்கு 7வது பட்ஜெட்டாகும்.


ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யப்போகும் 13வது மத்திய பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்