டில்லி : 2025 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் புதிதாக தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் உரையில் என்னவெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் தான் ஒவ்வொரு துறையிலும் பரபரப்பாக பேசப்பட்டு, அலசி ஆராயப்பட்டு வருகிறது.
2025-2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 01ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். இது இவர் தாக்கல் செய்யும் 8வது மத்திய பட்ஜெட் ஆகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வரி சலுகை அறிவிப்புகள் இருக்குமா? என்பது தான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
2025ம் ஆண்டில் ஏறக்குறைய இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவை நடத்தப்பட உள்ளன. சட்டசபை தேர்தல் என்று பார்த்தால் பிப்ரவரியில் டில்லிக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்திற்கும் நடைபெற உள்ளது. ஆனால் இடைத்தேர்தலோ குஜராத், ஜம்மு-காஷ்மீர், கேரளா, மணிப்பூர், பஞ்சாப், தமிழகம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ளது. இது தவிர அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் தலைநகர் டில்லியில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி வேண்டும் என பாஜக கடுமையாக முயற்சி வருகிறது. இதற்காக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜக.,விற்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி தான் நடந்து வருகிறது. இடையில் 2014-2015 வரையிலான ஓராண்டு மட்டுமே ஜனாதிபதி ஆட்சி அம்ல்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது ஆம்ஆத்மி கட்சி. அதே போல் பீகார் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக- ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி தான் நடந்து வருகிறது. இந்த முறையும் பீகாரில் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
இதனால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கவர வேண்டிய கட்டாய சூழலில் பாஜக உள்ளதால் இந்த முறை மத்திய பட்ஜெட்டில் மக்கள் கவரும் வ்கையிலான அதிக அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் பட்ஜெட் உரையில் என்னென்ன அம்சங்கள் மக்களை கவரும் வகையில் இடம்பெறும் என வாங்க பார்க்கலாம்.
பட்ஜெட் அறிவிப்பு எதிர்பார்ப்புக்கள் :
வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படலாம். அதாவது ரூ.10 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 25 சதவீதம் வரி அமல்படுத்தப்படலாம். ஒருவேளை இவை அமல்படுத்தப்பட்டாலல் அரசுக்கு ரூ.50,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இவைகள் கொண்டு வரப்படுவதற்கும், வரப்படாமல் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.
தற்போதுள்ள வருமான வரி உச்சவரம்பின் படி, ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.7.75 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. உலகளாவிய வர்த்தக ஆய்வு அறிக்கை, பணவீக்கத்திற்கு ஏற்ப வரி விலக்கு வரம்பை ரூ.5.7 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டங்ஸ்டன் போராட்டத்திற்குக் கிடைத்தது மாபெரும் வெற்றி.. அனைவருக்கும் நன்றி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என். ரவி. குடியரசு தின விருந்து.. அதிமுக, பாஜக பங்கேற்பு.. திமுக கூட்டணி புறக்கணிப்பு!
அரிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. 11,608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்கு மொத்தமாக ரத்து!
ஜன நாயகன்.. காலையில் செல்பி புள்ளை.. மாலையில் நான் ஆணையிட்டால்.. அடுத்தடுத்து விருந்து வைத்த விஜய்
வேங்கைவயல் விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவையில்லை.. எஸ்ஐடி விசாரணை வேண்டும்.. விஜய்
பூஜை போட்டாச்சு.. மேலூர் அருகே பிரமாண்ட கட்டடத்திற்கு இடம் மாறுகிறது மதுரை மத்திய சிறை
பத்மபூஷண் விருது... குவியும் வாழ்த்துகள்.. ஆனால் அஜீத் குமார் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
Republic Day: தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.. டெல்லியில் கோலாகல விழா!
மெரீனாவில் கோலாகலம்.. தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா!
{{comments.comment}}