பட்ஜெட் 2024 : தனிநபர் வருமான வரியில் மாற்றம்...ரூ.3 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால்தான் வரி!

Jul 23, 2024,07:07 PM IST

டில்லி :  மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல புதிய வருமான வரி திருத்தங்கள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் வருமான வரியில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே 5 சதவீதம் வருமான வரி என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் இனி ரூ.3 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாலே 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.




புதிய வருமான வரி விகிதங்கள் :


வருட வருமானம் ரூ. 3 லட்சம் வரை - வரி இல்லை

ரூ. 3 முதல் 7 லட்சம்  - 5%

ரூ. 7 முதல் 10 லட்சம் - 10%

ரூ. 10 முதல் ரூ. 12 லட்சம் - 15%

ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம்  - 20%

ரூ. 15 லட்சத்திற்கு மேல் - 30% 


புதிய வருமான வரி வரம்பினால் மாத சம்பளதாரர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நான்கு கோடி சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இதனால் பயடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Standard deduction  அதாவது நிரந்தர வருமான வரிக் கழிவு ரூ.50,000 ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்