ரூபாய் 3 லட்சம் வரை வருமான வரி இல்லை.. பட்ஜெட்டில் வெளியான வருமான வரி விகித அறிவிப்புகள்

Jul 23, 2024,07:07 PM IST

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று 20204-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேச ஆரம்பித்துள்ளார்.


நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 7வது பட்ஜெட் இது. 3வது மோடி அரசுக்கு இது முதல் பட்ஜெட்டாகும்.


அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு மற்றும் அறிவிப்புகள்:




இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சீரான முறையில் நடைபெற்று வருகிறது. வரும் ஆண்டுகளிலும் இதுதொடரும். 


இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் அதிகரிப்பு, சிறு குறு தொழில்துறை, நடுத்தர வர்க்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பண வீக்கம் தொடர்ந்து குறைவாகவும், நிலையாகவும் இருக்கும். 4% என்ற அளவில் அது இருக்கும்.


9 துறைகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை  தரப்படுகிறது 


- வேளாண் உற்பத்தி

- வேலைவாய்ப்பு மற்றும் திறன் அதிகரிப்பு

- மேம்படுத்தப்பட்ட மனித வளம், சமூக நீதி

- உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவு

- நகர்ப்புற மேம்பாடு

- மின்சார பாதுகாப்பு

- அடிப்படைக் கட்டமைப்பு

- ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறை

- அடுத்த தலைமுறை சீரமைப்புத் திட்டங்கள்


வேளாண் துறைக்கு ரூ. 1.52 லட்சம் நிதி ஒதுக்கீடு:


109 நாட்களில் விளைச்சல் கொடுக்கும் வகையிலான 32 வகை தோட்டப் பயிர்கள் விவசாயிகளுக்காக வெளியிடப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதை மத்திய அரசு உறுதி செய்யும்.


நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வசதி  செய்து தரப்படும்.


பீகார் மாநிலத்தில் சாலைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கு வசதியாக ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி உதவியாக ரூபாய் 15,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு


கடன் உத்திரவாத திட்டம்


சிறு குறு நடுத்தர தொழில்கள், புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன்கள் உத்திரவாத திட்டம் செயல்படுத்தப்படும்.  இந்த கடன் உத்திரவாத திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 


நகர்ப்புறங்களில் ஒரு கோடி ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டு வசதி திட்டத்திற்கான ரூபாய் 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்படும்.


விரைவு சாலை திட்டம் 


பாட்னா டூ பூர்னியா விரைவு சாலை, பக்சால் டூ பாகல்பூர் விரைவு சாலை, புத்தகயா டூ வைஷாலி சாலை போன்ற புதிய சாலை கட்டப்படும். இந்த விரைவு சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூபாய் 26 ஆயிரம் கோடியில் இரண்டு பாலங்கள் அமைக்கப்படும்.


ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் 


ஆந்திராவை பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக ரூபாய் 15,000 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


பீகார் மாநிலத்திற்கு பல சிறப்பு திட்டங்கள் 


பீகாரருக்கு சாலை மேம்பாடு, நீர்ப்பாசனம், வெள்ளை தடுப்பு, கோயில்கள் மேம்பாடு, உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் அசாம் உத்தரகாண்ட் இமாச்சல் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.


புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு


புற்றுநோயாளிகளுக்கான மேலும் மூன்று மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படும். இதனால் செல்போன் விலை குறைய வாய்ப்பு


தங்கம்,வெள்ளி மீதான சுங்கவரி குறைப்பு 


தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல் பிளாட்டின மீதானம் சுங்கவரி  6.5 சதவீதமாக குறைக்கப்படும். சுங்க வரி குறைக்கப்படுவதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


கடல் உணவுகள் மீதான வரி குறைப்பு


இறால் உணவு, மீன் உணவு மீதான இறக்குமதி வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்படும். இதனால் இவற்றின் விலை குறையும்.


TDS குறைப்பு


இணைய வழி வணிக நிறுவனங்களுக்கான TDS 0.1% குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


புதிய வருமான வரி விகிதங்கள்


வருட வருமானம் ரூ. 3 லட்சம் வரை - வரி இல்லை

ரூ. 3 முதல் 7 லட்சம்  - 5%

ரூ. 7 முதல் 10 லட்சம் - 10%

ரூ. 10 முதல் ரூ. 12 லட்சம் - 15%

ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம்  - 20%

ரூ. 15 லட்சத்திற்கு மேல் - 30%


புதிய வரிசலுகை


புதிய வருமான வரிமுறையில் ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி இல்லை. வரி சலுகை பெறுவதற்கான நிரந்தர கழிவு ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 75,000 ஆக உயர்த்தப்படும்.


ஆண்டு வருமானம் மூன்று லட்சம் வரை பெறுபவர்கள் வரி கட்டத் தேவையில்லை. மூன்று லட்சம் முதல் 7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் ஐந்து சதவீதமும், 7 முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 10 சதவிகிதமும்,10 முதல் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 15 சதவீதமும், 12 முதல் 15 லட்சம் வருமானம் பெறுபவர்கள் 20% வரி கட்ட வேண்டும்.


பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் அறிக்கை கருத்து


மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் படித்து வருவது மகிழ்ச்சி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 30ஆவது பக்கத்தில் உள்ளது. முதல் முறை வேலையில் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் உள்ளது என கூறியுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்