டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தனித் தனியாக சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, சொத்துக்கள் உள்ளிட்டவை குறித்து இந்த சட்டங்கள் வேறு வேறு விதிகளை வகுத்து வைத்துள்ளன. இதை மாற்றி அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை உருவாக்குவதே மத்திய அரசின் திட்டமாகும். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். இதனை அடுத்து கடந்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தற்போது சட்டமாகி, உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த பொது சிவில் சட்டத்தின் படி, பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த மக்களுக்கும் திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவை ஒரே மாதிரியாக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதையும் பதிவு செய்ய வேண்டும் என்று இச்சட்டத்தின் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் உள்ளிட்டவை குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய இணையதளத்தையும் முதல்வர் தாமி தொடங்கி வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}