தமிழ்நாட்டில்.. இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

Aug 21, 2024,03:25 PM IST

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது.


தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசைப் பட்டியலில் 42,236 மாணவ மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் ஓரிடத்திற்கு 4 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு  இணையதளத்தில் இன்று தொடங்கியது. இதன் மூலம் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 27  தேதி மாலை 5 மணி வரை இணையவழியில்  பதிவு  செய்து, கட்டணம் செலுத்தி இடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 28ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.




இதன்படி தற்காலிக இடஒதுக்கீடு 29ம் தேதியும், இறுதி இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 30ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர வேண்டுமாம். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடங்கள் ஆகியவற்றிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாகவே நடைபெற உள்ளது.


கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண் அட்டை, 10,11,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் எடுத்து வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்றும், மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்