சென்னை:இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும், மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள்தொகை அடிப்படைகளான நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை இந்த அனைத்து கட்சி கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும் அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 30 வருடத்திற்கு மறு வரையை தள்ளி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகளைத் தவிர அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டுள்ளது.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று முதல் மு க ஸ்டாலின் பேசிய உரை:
தமிழ்நாடு அரசியல் சார்பில் அனைவரையும் வருக வருக என்று நான் வரவேற்கிறேன். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதை உணர்த்துவதற்காகவே இந்த அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இன்று தமிழ்நாடு 39 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் நிலவுகிறது. ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டில் மக்களவை எண்ணிக்கையை மறு சீரமைப்பு செய்யப்போவதை பொதுவாக மக்கள் தொகை கணக்கிட்டு தான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் நம் தமிழ்நாடு வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி, மற்றும் சுகாதாரம் முன்னெச்சரிக்கை மூலமாக இதை சாதித்து இருக்கிறோம். இப்போது இருக்கின்ற 543 நாடாளுமன்ற தொகுதிகளில் தொடர்ந்து செய்ய இருப்பதால் மக்கள் தொகை குறைவால் மக்கள் தொகை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்கும் என சொல்கிறார்கள். அதாவது 29 எம்பிக்கள் கிடைக்க மாட்டார்கள். நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கை 848 ஆக ஆக உயர்த்தப்பட்டு தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய மக்கள் தொகையின் படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.இந்த இரண்டு முறைகளில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிகமாக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும. இது வெறும் உறுப்பினர்களை பற்றிய கவலை இல்லை. நமது தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை.நம் தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கின்ற முக்கிய பிரச்சினைகளில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லாரும் முன் நான் வைக்கிறேன்.
எல்லா கட்சிகளும் இணைத்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு செய்தால் அது தமிழ்நாட்டின் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை எண்ணிக்கையை குறைத்து விடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற அவை குறையும் என சொல்கிறது. மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உள்ள தென் மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாகத்தான் அமையும் . கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நமது தீர்மானத்தை நிறைவேற்றினோம். தமிழ்நாட்டுடைய உரிமை கூட்டாட்சி கருத்தியல் கோட்பாடு தமிழ்நாடு உடைய பிரதிநிதித்துவம் எதுவும் பாதிக்க கூடாது என தீர்க்கமாக திடமாக அப்பவே வெளியிட்டோம்.
இந்த தொகுதி மறு சீரமைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். இதுக்குள் நமக்கான கருத்து வேறுபாடும் வரும் நிச்சயம் இருக்காது என நினைக்கிறேன். கூடாது என்று விரும்புகிறேன். இந்திய நாட்டின் அமைப்பின் கூட்டாட்சிக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிற அரசியல் பிரதிநிதித்துவ உரிமையில் நேரடியான தாக்குதல். இப்படி சமநிதியற்ற அநீதியான தொகுதி மறு சீரமைப்பு செயல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நெறிக்கப்படும்.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் பாதுகாப்பதற்காக நமது மாநிலத்திற்குரிய பலம் குறைக்கப்படும். 39 எம்பிக்கள் இருக்கும்போது எழுப்புகிற குரலையே ஒன்றிய அரசு எதிர்க்கின்ற நிலையில் இந்த எம்பிக்களின் நிலை இன்னும் குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே நம்முடைய நிலைப்பாட்டை அழுத்தந்திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாக வேண்டும். வர இருக்கின்ற அல்லது எதிர்காலத்தில் நடைபெற இருக்கிற மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறு சீரமைப்பை கடுமையாக ஆணித்தமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். எனவே உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவோம் எனக்கூறி நான் அந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன். தீர்மானம்
1.இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள்தொகை அடிப்படைகளான நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை இந்த அனைத்து கட்சி கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.
2.நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்த ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000 ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறு தற்போதும் இந்த வரையறை 2026லிருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்தும் பட்சத்தில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றதின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதி எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்ட திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
3.தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானது இல்லை என்றும் அதே சமயத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சமூக பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்துகின்ற தண்டனையாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
4.இக்கோரிக்கைகளை தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்து கட்சி கூட்டம் முன்வைக்கிறது. இக் கோரிக்கைகளையும் அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் மக்கள் சார்ந்த பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும் அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்த தீர்மானத்தின் மீதான உங்கள் கருத்தை அனைத்து கட்சியின் தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
தொகுதிகள் மறு வரையறையை 30 வருடத்திற்குத் தள்ளி வையுங்கள்.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!
தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!
விகிதாச்சாரம் குறையக்கூடாது.. அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு இது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தேவை எழுந்துள்ளது.. விசிக தலைவர் திருமாவளவன்..!
ஹலோ.. இன்னிக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க.. வெளில வெயிலைப் பார்த்தீங்கள்ள.. கவனம்!
அஜீத், கமல்ஹாசன் வழியில் நயன்தாரா.. லேடி சூப்பர்ஸ்டாரை துறந்தார்.. அடுத்து ரஜினிகாந்த்தா?
பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தருக்கு என்னாச்சு.. நல்லாதானே இருந்தார்.. ஏன் இந்த விபரீத முடிவு?
தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.. பெரும் தண்டனையே.. விஜய் அறிக்கை!
{{comments.comment}}