கெஜ்ரிவால் கைது: ஜநா பொதுச்செயலாளர் கவலை.. இதெல்லாம் தேவையில்லாதது.. இந்தியா சாடல்!

Mar 29, 2024,04:48 PM IST

வாஷிங்டன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது , காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்க விவகாரங்கள் தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேவையில்லாதது என்று இந்தியா வர்ணித்துள்ளது.


மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1ம் தேதி வரை அவருக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் கைதுக்கு பல்வேறு தலைவர்கள் பல்வேறு மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கெஜ்ரிவால் குடும்பத்தினருக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னதாக அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் சார்பில் கெஜ்ரிவால்  குடும்பத்தினருக்கு சட்ட உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.




இந்நிலையில், கெஜ்ரிவால் கைதுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஜநா பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளரும் கருத்து தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஐநா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், இந்தியாவிலும் அல்லது தேர்தல் நடைபெறும் எந்த நாட்டிலும், மக்களின் அரசியல் மற்றும் சிவில்  உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் என்ற சூழல் இருப்பதாக ஜநா நம்புகிறது என்று தெரிவித்துள்ளார்.


இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் ஜார்ஜ் கூறுகையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானம் அவருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பிச்சாரம் செய்வதை சவாலாக மாற்றும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளையும் நாங்கள் அறிவோம். இந்தச் சிக்கல்கள் அனைத்திற்கும் நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.


இந்தக் கருத்துகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மையில் தலையிடும் வகையில் இந்தக் கருத்துக்கள் உள்ளன. இவை தேவையில்லாதவை என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்