கீவ்: உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் வெகு தூரத்திலிருந்து அதாவது 3.8 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. உலக சாதனையாக இதை உக்ரைன் தரப்பு பெருமையாக சொல்லி வருகிறது.
இதுதொடர்பான செய்தி ஒன்றை நியூஸ்வீக் வெளியிட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், (உக்ரைன் செக்யூரிட்டி சர்வீஸ் பிரிவைச் சேர்ந்தவர்) ரஷ்ய வீரர்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்துள்ளார். ஊடுறுவி வந்த அவர்களை கிட்டத்தட்ட 3.8 கிலோமீட்டர் தொலைவிலிருந்து அவர் தனது ஸ்னைப்பார் துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டார். இதில் ஒரு ரஷ்ய ராணுவ வீரர் உயிரிழந்தார். மற்ற வீரர்கள் பின்வாங்கிச் சென்று விட்டனர்.
மிக மிக தூரத்திலிருந்து குறி பார்த்து சுட்டு ஒருவரை வீழ்த்தியிருப்பது சர்வதேச போர்க்களத்தில் இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது கின்னஸ் சாதனைக்கும் தகுதியானது என்று உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.
உக்ரைன் வீரர் துப்பாக்கியால் சுட்டதும் ரஷ்ய ராணுவ வீரர்கள் வேகமாக தரையில் படுத்து மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்க முயல்வதும் ஸ்னைப்பரில் தெளிவாக பதிவாகியுள்ளது.
கனடா படையின் முந்தைய சாதனை
இதற்கு முன்பு 2017ம் ஆண்டு ஈராக்கில் நடந்த போரின்போது அமெரிக்க கூட்டுப் படையில் இடம் பெற்றிருந்த கனடா சிறப்புப் படைப் பிரிவு வீரர் ஒருவர் 3.54 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சுட்டதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை உக்ரைன் வீரர் மிஞ்சியுள்ளார்.
அதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து வீரர் கிரேக் ஹாரிசன் என்பவர் 2.48 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சுட்டு தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒரு போராளியை சுட்டுக் கொன்றார் என்பது நினைவிருக்கலாம்.
உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு ஆண்டைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர். உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்து விட்டன. விடாமல் இரு தரப்பும் போர் புரிந்து கொண்டுள்ளன.
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}