Cooking.. இன்ஸ்டன்ட்  பொடியில் இத்தனை சமையலா!

Aug 21, 2023,04:55 PM IST
- மீனா

"இன்ஸ்டன்ட்" என்ற பெயரை கேட்டாலே நமக்கு எல்லாம்  சந்தோஷம்தான். ஏனென்றால் நம்முடைய வேலை நேரத்தை குறைத்து  கண் இமைக்கும் நொடியில் சமையலை  முடிப்பதற்கு இந்த இன்ஸ்டன்ட் நமக்கு உதவியாக இருக்கும்.ஒரு மிக்சை வைத்து பலவித சமையல் செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா உங்களால். 

அட ஆமாங்க! இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸை நாம் ரெடி பண்ணி வைத்துக் கொண்டால்  சீக்கிரம் சமையல் முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நேரத்தில் இது நமக்கு  கைகொடுக்கும். அதுமட்டுமல்ல வீட்டிற்கு யாராவது திடீர் விருந்தாளிகள் வந்தால் கூட அய்யோ எதுவுமே வீட்ல இல்லையே ,என்ன செய்வது என்று பதற்றம டைய தேவையில்லை. இந்த  மிக்ஸை வைத்து பலகாரங்களும் செய்து அவர்களுக்கு கொடுத்து  அசத்தி விடலாம். அதுலயும் சமையல் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றால்  நமக்கு யாருக்கு தான் பிடிக்காது. அப்படி நம்ம சமையலை சீக்கிரம் முடிகிறதுக்கும் இந்த ஒரு மிக்ஸ் போதும். 



சமையலும் சீக்கிரம் முடியனும் அதே நேரத்தில் சத்தானதாகவும் இருக்கணும்னா அதுக்கு இந்த மிக்ஸ் போதும். இவ்வளவு விஷயங்கள் இருக்கிற ஒரு இன்ஸ்டன்ட் மிக்ஸ் இப்ப உங்களுக்கு சொல்ல போறேன். முதலில் இதற்கு தேவையான பொருள்கள்

துவரம் பருப்பு-1 கப்
கடலைப்பருப்பு-1 கப்
பாசிப்பருப்பு-3/4 கப்
உளுந்தம் பருப்பு-1கப்
அரிசி-1  கப்
காய்ந்த மிளகாய்-15
சீரகம்-2  ஸ்பூன்
வெந்தயம்-1/4  ஸ்பூன்
பெருங்காயம் பொடி-1 ஸ்பூன்
சுக்குப்பொடி-1  ஸ்பூன்
கருவேப்பிலை-சிறிதளவு

இதில் உள்ள பருப்புகள் அனைத்தையும் நிறம் மாறாமல்  பாத்திரத்தில் போட்டு நன்கு வறுக்க வேண்டும் . பிறகு அரிசி சீரகம், வெந்தயம், கருவேப்பிலை போட்டு வறுத்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதே பாத்திரத்திலேயே பெருங்காய பொடியையும் சேர்த்து  கிளறி விட வேண்டும். 


வறுத்த இவையெல்லாம் நன்கு ஆறிய உடன் மிக்ஸி ஜாரில் போட்டு சுக்கு பொடி மற்றும் மூன்று ஸ்பூன் உப்பு சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும் .இப்போது இன்ஸ்டன்ட் மிக்ஸ் ரெடி. இதை அப்படியே ஒரு வாரம் முழுவதும் வெளியில் வைக்கலாம், கெட்டுப் போகாது .மேலும் அதிகமாக செய்து வைத்துக் கொண்டால் அதை பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி ஒரு மாதம் முழுவதும் வைத்து பயன்படுத்தலாம். இப்போது இதை வைத்து ஒரு ரெசிபி மட்டும் பார்க்கலாம்.



இந்த மிக்ஸி இரண்டு கப் அளவு மாவு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது சோடா உப்பு, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து 1/4 மணி நேரம் ஊற வைத்து விட்டால் போதும். இந்த மாவை எடுத்து இட்லி பாத்திரத்தில்  ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்தால் ரவை இட்லி வடிவத்தில் நமக்கு காலை டிபன் இட்லி ரெடி . 

இந்த பருப்புகளில் எல்லாம் அதிக புரோட்டின் இருப்பதினால் நமக்கு இது ஒரு சத்தானதாகவும் இருக்கும் .அதே நேரத்தில் அதிகப்படியான பருப்புகள் இருக்கும் பட்சத்தில் செரிமான பிரச்சனை வராமல் இருப்பதற்கு பெருங்காயம் மற்றும் சுக்கு பொடி இவற்றையும் நாம் பயன்படுத்தி செய்வதால் இதை தாராளமாக சாப்பிடலாம் .அதுவும் நாம் நினைத்த நேரத்தில் சீக்கிரம் செய்து சாப்பிடுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இந்த மிக்ஸை வைத்து வேற என்ன செய்யலாம் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இந்த மிக்ஸை ரெடி பண்ணி வைங்க.. போய்ட்டு வந்துர்றேன்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்