திருவண்ணாமலை: வந்தவாசியில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை தெரு நாய்கள் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வந்தவாசி நகராட்சி தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுமிகள், முதியவர்கள், என அனைவரும் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை தெருநாய்கள் கடுமையாக தாக்குகின்றன.
இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருநாய்களால் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.
அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
வந்தவாசி கடைத்தெருவில் சிறுமி ஒருவர் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென தெருநாய் கடித்துள்ளது. அதேபோல் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய தனது அம்மாவுடன் நின்று கொண்டிருந்த மற்றொரு சிறுமியும் தெரு நாய்கள் தாக்கியுள்ளன. இந்த நிலையில் தெரு நாய்கள் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}