நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை அருகே 14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு கார் ஓட்ட பழகிய சிறுவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
நாமக்கல் மாவட்டம் பெரியமருதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் 17 வயதுடைய லோகேஷ்சும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய 14 வயது மகன் சுதர்ஷனும் நண்பர்கள். இருவரும் பள்ளி செல்லாமல் இருந்து வந்துள்ளனர். நேற்று இரவு லோகேஷ் சுதர்ஷனுக்கு கார் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி தனது அப்பாவின் காரை இரவு 11 மணியளவில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்ட பழகிய இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார். அப்பகுதிக்கு வந்து சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் விளையாட்டாக செய்த செயல் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}