திருச்சி: சட்டத்திற்கு புறம்பாக நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ போட்ட ஹரிஹரன் மற்றும் ஜெயராமன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் ஒருவரின் சுய அடையாளத்திற்காக பச்சை குத்தும் வழக்கத்தை கடைபிடித்து வந்தனர். இந்த பச்சை குத்துதல் பெரும்பாலும் நரம்பு இல்லாத கை சதை பகுதிகளிலேயே குத்துவதை நடைமுறையாக கொண்டும் வந்தனர். ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெண்கள் வரை உடம்பு முழுக்க வண்ண வண்ணமாக டிசைன் டிசைனாக டாட்டூ குத்துவதை கடைபிடித்து வருகின்றனர். இந்த கலாச்சாரம் தற்போது பேஷனாகவும் ஆகிவிட்டது. காலப்போக்கில் டிரெண்டாகவும் உருவெடுத்து நிற்கிறது.
காமெடி நடிகர் வடிவேல் செல்வது போல ஒரு இடம் பொருள் ஏவல் வேண்டாமா என்பதற்கு ஏற்ப எந்த ஒரு வரைமுறையே இல்லாமல் கழுத்து காது கை கால் முதுகு வயிறு தொடை என எல்லா இடங்களிலும் டாட்டூ போடுகின்றனர். இன்றைய இளைஞர்கள் இப்படி டாட்டூ போடுவதால் ஒருவரிடம் இருந்து தன்னை வித்யாசப்படுத்திக் கொள்வதற்காக இந்த முறைகளை கடைபிடித்து வருகிறார்களாம்.
அந்த வகையில் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருபவர் ஹரிஹரன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாடலுக்காக மும்பைக்குச் சென்று தனது நாக்கை இரண்டாகப் பிளந்து டாட்டூ போட்டு அதிலும் தனது கண்களை நீல நிறமாக மாற்றி அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சிக்கு வந்த ஹரிஹரன் தனது கடையில் பணியாற்றி வந்த நண்பரான ஜெயராமுக்கு இதே போல நாக்கை இரண்டாக கிழித்து அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டும் காட்சியை வீடியோவாக பதிவேற்றம் செய்து அதனை தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த சிலர், இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பலரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஹரிஹரன் மற்றும் ஜெயராமனை கைது செய்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதால் அதிரடியாக சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தனர்.
இது போன்ற வீடியோக்களை பார்த்து மாணவர்கள் இளைஞர்கள் தவறான செயலில் ஈடுபடக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தென் கொரியா விமானம் விபத்து.. 181 பேர் பலி.. டிசம்பரில் நடக்கும் 6 வது விமான விபத்து
கன்னியாகுமரி கண்ணாடிப்பாலம் நாளை திறப்பு.. சுற்றுலா பயணிகள் நடந்து களிக்க ஏற்பாடுகள் ரெடி!
Anbumani meets Dr Ramadoss.. தைலாபுரத்தின் கதவுகள் திறந்தன.. தந்தையை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்
எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் தாத்தா.. டாக்டர் ராமதாஸ் வழங்கிய பதவியை நிராகரித்தார் முகுந்தன்?
Anna university.. அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. பாதுகாப்பை உறுதி செய்ய என்ன பண்ணலாம்?
Bumrah 200.. டிராவிஸ் விக்கெட்டை வீழ்த்தி.. பல சாதனைகளை அள்ளிய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா!
Yearender 2024.. அவ்வப்போது அதிரடி.. திடீர் திடீரென சரிவு.. 2024ல் எப்படி இருந்தது தங்கம் விலை?
எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான்.. நேற்று புதுச்சேரியிலும் நடந்தது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
மார்கழி 15 திருவெம்பாவை பாசுரம் 15 - ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே!
{{comments.comment}}