ஈரானில் பயங்கரம்.. கெர்மான் நகரில் இரட்டை குண்டுவெடிப்பு.. 103 பேர் பலி; 141 பேர் காயம்

Jan 03, 2024,10:08 PM IST

தெஹ்ரான் : ஈரானில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் சுமார் 103 பேர் உயிரிழந்துள்ளனர். 141 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.


ஈரானின் தெற்கு பகுதி நகரமான கெர்மானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 103 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஏராளமானவர்கள் மிகவம் மோசமாக காயடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 141 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.




2020ம் ஆண்டு பாதுகாப்பு படையினர் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அதில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஷாஹிப் அல் ஜமான் மசூதி அருகே ஏராளமான மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை நேரில் கண்ட அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அலறும் காட்சிகள் அந்நாட்டு தொலைக்காட்சிகளில் பகிரப்பட்டு வருகிறது.


அந்த பெண் கூறுகையில், நான் காயமடையவில்லை. ஆனால் என்னுடைய ஆடை முழுவதும் ரத்தம். இந்த தெருவின் மற்றொரு பக்கத்தில் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் இந்த குண்டு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். முதல் குண்டுவெடிப்பு, இரண்டாவது குண்டுவெடிப்பை விட சக்தி வாய்ந்ததாக இருந்ததாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த குண்டுவெடிப்புக்கு ஈரான் அதிபர் ரைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் வேட்டையாடப்படுவார்கள், கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என்று ்அவர் எச்சரித்துள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்