சென்னை: விஜய் வந்துட்டா உடனே எதுவும் மாறிடாது. அவருக்குக் கூடிய கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது. தமிழகத்தில் தேர்தல் மோதல் என்றால் திமுக, அதிமுக தான் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
2026 சட்டமன்றத் தேர்தல் மிக கடுமையாக இருக்கும். திமுக கொண்டு வந்துள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ஓட்டுகள் அவர்களுக்கு உள்ளது.
அரசியலுக்கு புதிதாக விஜய் வந்திருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது. அந்த கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உள்ளது. காமராஜர் மெரினாவில் கூட்டம் நடத்திய போது ஒரு லட்சம் பேர் கூடினார்கள். ஆனால், அந்தத் தேர்தலில் தான் காமராஜர் ஒரு கல்லூரி மாணவரிடம் தோல்வி அடைந்தார். கூட்டத்திற்கு வாக்குக்கும் சம்பந்தமில்லை.
தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுக அதிமுக மட்டும் தான். மற்றவர்கள் யாரும் இல்லை. விஜய் தற்போது தான் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். இனிவரும் நாட்களில் விஜய் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்துதான் அவர் அரசியல் எதிர்காலம் அமையும்.விஜய் விஜய் என்று யார் பேசுகிறார்களோ அவர்கள் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று அர்த்தம். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
உதயநிதி அரசியலுக்கு வருவதில் தவறில்லை. அவர் பத்தாண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கிறார். ஒரே ஒரு செங்கலை வைத்து நாற்பது எம்பிக்களை பெற்றவர் என்றும் அவர் வர வேண்டுமா வேண்டாமா என்பது திமுகவினர் தான் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை அரசியலுக்கே தகுதியில்லாதவர். அண்ணாமலை போல் அரசியல் செய்தால் பாஜக வெற்றி பெறாது. அவரு ஒழுங்கா படிக்கல, இப்ப போய் படிக்கிறேன்னு சொல்லாரு. திமுகவை திட்டிக்கிட்டே இருந்தா வளர முடியாது. உடம்பு முழுக்க வாய் உள்ளவர்னா அது அண்ணாமலை தான் என்றார் எஸ்.வி.சேகர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}