அக்டோபர் 3வது வாரத்தில் விஜய் கட்சி மாநாடு? அனுமதி கேட்டு மீண்டும் மனு

Sep 16, 2024,11:07 AM IST

சென்னை: விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை அக்டோபர் 3வது வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய தேதியில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விஜய் கட்சியின் சார்பில் மீண்டும் போலீசாரிடம் அனுமதி கேட்டு மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அன்று முதல் தொடர்ந்து  கட்சியின் வளர்ச்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.கடந்த ஆகஸ்டு மாதம் 22ம் தேதி கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்து வைத்தார். தவெகவின் முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை மற்றும் கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்தார் விஜய்.



அதன் பின்னர் கட்சியின் மாநாட்டை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இறுதியாக, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்து உள்ள வி.சாலையில் மாநாடு நடந்த சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் கூறி, கடந்த மாதம் 28ம் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  தவெக கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. 

அதன் பின்னர் காவல்துறையினர் சார்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு தவெக பதில் அளித்த நிலையில், மாநாடு நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கினர். அதிலும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. காவல்துறை விதித்த நிபந்தனைகளை குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியாது என்பதாலும், மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு வசதிகளை தவெக ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதால், வருகிற 23ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டு, அக்டோபர் 23ம் தேதிக்கு மாநாட்டை தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. தற்போது அக்டோபர் 23ம் தேதி மாநாடு நடைபெறுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் ஜாதகப்படி அக்டோபர் மாதம் தான் மாநாடு நடத்த வேண்டும் என்று ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது. இதனால் அக்டோபர் 3வது வாரத்தில் மாநாட்டை நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீண்டும் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. மாநாடு நடைபெறும் தேதியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் அறிவிப்பார் என்று ஏற்கனவே அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் மாநாடு குறித்த அறிவிப்பை விஜய்யே வெளியிட்டால் தான் தெளிவான தகவல் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்