சென்னை: ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் அதிரடியான ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.
தவெகவுக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் இடையிலான மோதலுக்கான பிள்ளையார் சுழியாக இது பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தன்னைப் பற்றித்தான் தனது கட்சியின் 8வது ஆண்டு விழாவின்போது பேசியிருந்தார். தனது இத்தனை கால அரசியல் வாழ்க்கையில் ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பதை புரிந்து கொண்டிருப்பதாகவும் தான் தோல்வி அடைந்த அரசியல்வாதி அல்ல என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு தவெக சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் ஒரு பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
பல்லாண்டு காலமாக ரசிகராக இருந்து அதிதீவிரமாக அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு தொண்டனாக., தோழனாக சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன்.
இவ்வளவு நாளாக ஒருவர் பேசியது தான் மக்களுக்கு புரியவில்லை என்றால் இப்போது அவர் யார், எதற்காக வந்தார் என்பது அவருக்கே புரியாமல் பேசி வருகிறார். அவர் யாரென்று நேரடியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை சொல்லாமலே மக்களுக்கு புரியும்.
ரசிகர்களும், மக்களும் வாக்காளர்களாக மாறுவது அந்த நடிகரின் மக்கள் செல்வாக்கு, தலைசிறந்த கொள்கைகள், தமிழ்நாடு சார்ந்த அரசியல் முன்னெடுப்பு, மக்கள் நலன் சார்ந்த பணிகள் ஆகியவற்றை சார்ந்தது.
ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்று திடீரென போதி மரம் அடியில் அமர்ந்து ஞானம் பெற்றது போல் அறிவாலயத்தில் கலந்து கரைந்த பின் பேசி வருகிறார்கள்.
எம்ஜிஆர் ரசிகர்கள் வேறு, சிவாஜி ரசிகர்கள் வேறு., ரஜினி ரசிகர்கள் வேறு, மற்ற ரசிகர்கள் வேறு., எங்கள் தலைவரின் ரசிகர்கள் வேறு!!!
எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வெற்றியை சிவாஜி பெற முடியவில்லை. எம்ஜிஆர் தனது ரசிகர்களை அரசியல்மயப்படுத்தி வாக்காளர்களாக்கியது போல எங்கள் தலைவர் கோடிக்கணக்கான ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் எப்படி வாக்காளர்களாக மாற்றுகிறார் என்பதை பாருங்கள். ஒருவரது செயல்பாடுகள் தான் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்யும்.
எந்த ஊழல் கூடாரத்துக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை எல்லாம் உடைத்து வீர வசனம் பேசி வந்தார்களோ, இன்று அதே ஊழல் கூடாரத்தில் சுயநலனுக்காக இளைப்பாறிக் கொண்டு அவர்களுக்காக டப்பிங் பணிகள் செய்து வருகிறார்கள்.
மக்களுக்காக மக்களை நம்பி உழைத்தால் என்றுமே மக்கள் ஆதரிப்பார்கள். பணி ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும். இனியாவது ஆளும் பிக் பாஸ்களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள்! பொது நலத்துடன் உழையுங்கள்!! என்று ரமேஷ் கூறியுள்ளார்.
கமல்ஹாசனை விமர்சித்து தவெகவில் பொறுப்பில் உள்ள ஒருவர் விடுத்துள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!
2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!
தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!
பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!
அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?
தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்
சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!
{{comments.comment}}