TVK vs DMK.. முதல் முறையாக மோடி, மு.க.ஸ்டாலின் பெயர்களைச் சொல்லி ஆவேசம் காட்டிய விஜய்!

Mar 28, 2025,05:16 PM IST

சென்னை:   அதிமுக - பாஜக மீண்டும் அணி சேருவது உறுதியாகி விட்டதால் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பு நிலையை மேலும் கடுமையாக்கியுள்ளார் விஜய் . இன்று நடந்த தவெக பொதுக் குழுக் கூட்டத்தில் விஜய் பேசும்போது, இரு கட்சிகளின் தலைவர்களது பெயர்களையும் முதல் முறையாக வெளிப்படையாக பேசி கடுமையாக தாக்கியும் பேசினார்.


தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய கட்சியாக நுழைந்துள்ளது தவெக. ஆனால் அந்தக் கட்சி கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் மற்ற கட்சிகளை விட தவெகதான் அதிக எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொண்டு வருகிறது.




ஆனால் இது நாள் வரை தான் பேசிய கூட்டங்களில், கட்சி மாநாட்டில் பகிரங்கமாக எந்தத் தலைவரது பெயர்களையும் கூறாமல்தான் பேசி வந்தார் தவெக தலைவர் விஜய். ஆனால் இன்று நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களைச் சொல்லி கடுமையாக விமர்சித்தும் பேசினார்.


பாசிசம் பாயசம் என்பதுதான் இந்த இரு கட்சிகளையும் கடுமையாக விஜய் விமர்சித்துப் பேசிய வார்த்தையாகும். இன்று அதற்கும் மேல் ஒரு படி மேலே போய் முதல்வரையும், பிரதமரையும் குறிப்பிட்டுப் பேசினார் விஜய்.


விஜய் பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி பகிரங்கமாக குறிப்பிட்டார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, அப்பா என்று உங்களை அழைக்கச் சொல்கிறீர்களே.. ஆனால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறதே.. ஒரே நேரத்தில் காங்கிரஸுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைத்திருக்கும் கட்சி திமுக என்று கடுமையாக விமர்சித்தார்.


மேலும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என்று குறிப்பிட்ட அவர், பெயரைச் சொன்னால் மட்டும் போதாது, செயல்பாடும் இருக்க வேண்டும் என்று விமர்சித்தார்.


பாஜக குறித்துப் பேசியபோது, திமுகவின் சீக்ரட் ஓனர் என்று பாஜகவை விமர்சித்தார். பிரதமர் மோடி பெயரைச் சொல்லிப் பேசிய அவர், ஏன்ஜி தமிழ்நாடு என்றால் உங்களுக்கு அலர்ஜி ஜி என்றும் கிண்டலாக குறிப்பிட்டார்.




விஜய் இதுவரை இல்லாத அளவுக்கு முதல்வர் ஸ்டாலினையும், பிரதமர் மோடியையும் விமர்சித்துப் பேச முக்கியக் காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பாஜக அதிமுக இடையே மீண்டும் கூட்டணி உருவாகப் போகிறது. இதுதொடர்பாக டெல்லியில் இரு கட்சித் தலைவர்களும் பேசி விட்டனர். எனவே இந்தக் கூட்டணி மீண்டும் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பழைய தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் களம் காணவுள்ளது.


எனவே இனியும் இவர்களது பெயர்களைச் சொல்லாமல் அரசியல் செய்வது சரியாக இருக்காது என்பதாலும், திமுகவை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தால்தான் தவெகவுக்கு செல்வாக்கு உயரும் என்பதாலும் இன்று முதல் பெயர்களைச் சொல்லி விஜய் பேச ஆரம்பித்திருக்கிறார் என்று கருதப்படுகிறது. மேலும் பெயர்களைக் குறிப்பிடாமல் பூடகமாகவே பேசி அரசியல் செய்வது சரியாக இருக்காது என்பதாலும், அதையும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்பதாலும்தான் இன்று முதல் ஓப்பனாக விஜய் பேச ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்